.jpg)
சிட்டிசன் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB), அதன் மூன்றாவது 'CDB அதிர்ஷ்டம் 2013' பரிசுப் போட்டியினை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. வருடத்துக்கு மூன்று முறை இடம்பெறும் இப் பரிசு போட்டி மூலம் மூன்று பெறுமதி வாய்ந்த ஜீப் வண்டியினை பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் CDB நிலையான வைப்பு கணக்கொன்றில் ரூ.10,000 அல்லது CDB சேமிப்பு கணக்கில் ரூ.5000 வைப்பிலிட்டு இப்போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினை பெற முடியும். நிலையான வைப்பு கணக்கில் வைப்பிலிடப்படும் ஒவ்வொரு ரூ.10,000 இற்கும் மற்றும் சேமிப்பு கணக்கில் வைப்பிலிடப்படும் ஒவ்வொரு ரூ.5,000 மேலதிக வைப்புக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் பெறுமதியான ஜீப் ஒன்றின் உரிமையாளராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
'CDB அதிர்ஷ்டம் இன் முதல் பரிசளிப்பு நிகழ்வில் ஒவ்வொன்றும் ரூ.2 மில்லியன் பெறுமதியான 3 ஆடம்பர ஜீப் வண்டிகளையும், இவ்வாண்டில் ரூ.5 மில்லியன் பெறுமதி வாய்ந்த 3 ஆடம்பர ஜீப் வண்டிகளையும் வழங்கவுள்ளோம்' என CDB நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியுமான மல்கம் வீரசூரிய தெரிவித்தார்.
'CDB அதிர்ஷ்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மொத்தமாக 6 வெற்றியாளர்கள் தெரிவாகியுள்ளதுடன், இதில் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த எஸ்.கே.கணேசன், அநுராதபுரத்தை சேர்ந்த யுதீர சாலிந்த, வத்தளையை சேர்ந்த பி.கே.ஈ.ரொட்ரிகோ (சிரேஷ்ட பிரஜை), மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த சி.யு.நாகொடவிதான, சிரேஷ்ட பிரஜையான காலியைச் சேர்ந்த டபிள்யு.பீரிஸ் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த சியாமளி பின்டோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
'CDB அதிர்ஷ்டம் பரிசுப் போட்டியில் எனக்கு ஜீப் கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் என் கனவு நனவானதுடன், CDB மூலம் அதிர்ஷ்டம் திட்டம் ஏற்பாடு செய்வதையிட்டும் மற்றும் இத்தகைய பெறுமதியான பரிசினை பெற வாய்ப்பளித்தமைக்காகவும் CDB நிறுவனத்திற்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்' என சியாமளி பின்டோ தெரிவித்தார்.
'CDB அதிர்ஷ்டம் 2013/14' அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த CDB இன் பணிப்பாளரும், பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியுமான மல்கம் வீரசூரிய, 'இத் திட்டத்தின் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதுடன், பாதுகாப்பான எதிர்காலத்திற்கு அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பும், சேமிப்புக் கணக்கு உரிமையாளர்களுக்கும் நிலையான வைப்பு கணக்கு உரிமையாளர்களுக்கும் CDB அதிர்ஷ்டம் திட்டமானது அதிக வெற்றிகளை பெறவும், வருமானத்தையீட்டிக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்குகிறது' என்பதை தெரிவித்தார்.
நாட்டின் முன்னணி நிதிசார் நிறுவனமாக திகழும் CDB, நிலையான வைப்பிற்கும், சேமிப்பு வைப்பிற்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்கி வருகின்றது. சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை அதிகரிக்கும் வகையில் CDB தனது VISA டெபிட் கார்ட் வசதிகளை நாடு முழுவதும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் CDB நிறுவனமானது, பிரான்ட் பினான்ஸ் லங்காவினால் (Brand Finance Lanka) தெரிவு செய்யப்படும் இலங்கையிலுள்ள முதல் 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களுள் 50ஆவது இடத்தை பெற்றுள்ளதுடன், சிறந்த சேவைகளை CDB வழங்கி வருகிறது.
.jpg)