2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சர்வதேச தரம் வாய்ந்த MSc. கற்கைகளை வழங்கும் SLIIT நிலையம்

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிலையமான SLIIT ஆனது ஐக்கிய இராச்சியத்தின் ஷெஃபீல்ட்; ஹலாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து என்டர்பிரைஸ் அப்ளிகேஷன் டெவலப்மன்ட் பிரிவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற MSc. பட்டதாரி கற்கைகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்கின்றது.
 
SLIIT ஆனது இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யக்கூடியதும், நான்கு செமஸ்டர்களைக் கொண்டதுமான முதுமானி கற்கைகளை வழங்குகிறது. MSc. in Information Technology கற்கையானது விசேடமாக தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் கணினி பொறியியல் போன்ற துறைகளை சேர்ந்த பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கை மூலம் IT தொடர்பான தகவல்கள் வழங்கப்படுகின்றன. இப் பட்டப்படிப்பானது துறைசார் நவீன போக்குகள், IT துறையின் அபிவிருத்திகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் MSc. in Information Management கற்கையானது நிர்வாக அனுபவம் கொண்ட தொழில்முறை பட்டதாரிகள் மற்றும் அங்கத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கையானது மாணவர்களிற்கு நவீன வியாபார வளர்ச்சி மற்றும் தகவல் முகாமைத்துவ கருவிப் பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் முன்னேறும் வியாபார சூழ்நிலைகளை எதிர்கொள்ள கூடிய வகையிலான தகவல் முகாமைத்துவ திறன்களை வழங்குகிறது. இக் கற்கையை பூர்த்தி செய்த மாணவர்கள் தகவல் முகாமைத்துவ சிஸ்டத்தினை திறம்பட நிறுவனங்களுள் கையாள முடிவதுடன், மதிப்பீகள், பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாற்றியமைப்பதற்கான தகுதிகளையும் பெற்றுக்கொள்வர்.
 
SLIIT இன் MSc. in Information Systems கற்கையானது IT துறையில் உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் வணிகத்தில் அதன் வெற்றிகரமான ஒருங்கிணைப்பு குறித்து கவனம் செலுத்துகிறது. நவீன வணிக நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டு முகாமைத்துவத்திற்கு வணிக மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் அவசியம் காணப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் தெளிவான அறிவினை பெற்றிருத்தல் அவசியமாகும். இக் கற்கையானது வியாபார தகவல் தொழில்நுட்ப துறையில் நிபுணர்களாக வர விரும்பும் பட்டதாரிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இத் திட்டங்கள் அனைத்தும் PhD வரை தமது கற்கைகளை பின்தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கைக்கு தெரிவாவதற்கு தகுதிகளாக மாணவர்கள் இளநிலை பட்டத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனத்தின் அங்கத்தவராக இருத்தல் வேண்டும்.
 
இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யக்கூடிய MSc. Degree programme in Enterprise Applications Development பட்டப்படிப்பினை SLIIT நிலையத்தின் நீண்டநாள் பங்காளராகிய ஐரோப்பாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் இத்துறை சார் நிபுணர்கள் மூலம் SLIIT நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகமானது திடமான கல்வி வாய்ப்புக்கள் மற்றும் துறைசார் தொடர்பின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகும். மேலும் இப் பல்கலைக்கழகமானது கற்பிக்கும் தரம் மற்றும் மாணவர் கற்றல் அனுபவம் காரணமாக பிரிட்டன் பல்கலைக்கழகங்களுள் முதலிடத்தை பெற்றுள்ளது.
 
MSc. in Enterprise Applications Development degree programme கற்கைகளுக்கு தெரிவாவதற்கு தகுதிகளாக மென்பொருள் பொறியில், மென்பொருள் அபிவிருத்தியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதல் அல்லது உயர் இரண்டாம் பிரிவில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள், அல்லது SLIIT நிலையத்தின் ஒப்புதலை பெற்ற இத்; துறைசார் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிலையத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
 
'இக் கற்கையானது தங்கள் தொழில் துறையில் IT பொறியியலாளர்கள் மற்றும் Developers ஆக விரும்பும் ஆர்வலர்களுக்கும், இலங்கையின் வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு திறமையான நிபுணர்களை வழங்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது' என SLIIT நிலையத்தின் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.
 
'இன்று பல நிறுவனங்கள் தமது வியாபாரத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு இயங்குதளங்களை மேற்கொண்டு வருகின்றன' என SLIIT இன் அதிபரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர்.லலித் கமகே தெரிவித்தார். ஆகவே இலங்கையில் இத் துறையை முன்னோக்கி கொண்;டு செல்லக்கூடிய நிபுணர்களை உருவாக்குவது மிக முக்கியமாகும்;. இது சம்பந்தப்பட்ட துறைகளுடனான எமது திடமான பங்காண்மை மூலம் மாணவர்களிற்கு பெறுமதியான கற்றல்களையும், நேரடி அனுபவங்களையும் வழங்க முடிகிறது. மாணவர்களிற்கு தரமான கல்வி வாய்ப்புகளையும், அவர்களது தொழில் வாழ்க்கை அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு திறனுக்கான பயிற்சிகளை உள்ளடக்கிய இந்த கற்கையானது இக் கல்வி நிலையத்தின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .