
SLASH திருவிழா (Sri Lanka Shopping Festival) நிகழ்வு பற்றிய அறிவித்தல், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நவம்பர் 1ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. SLASH என்பது கொழும்பு உள்ளடங்கலாக, நாட்டின் பிரதான நகரங்கள் முழுவதும் பெப்ரவரி மாதம் முதல் தமிழ், சிங்கள புத்தாண்டு வரை இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை முன்னெடுக்கப்படும் ஷொப்பிங், களியாட்டம், உணவருந்தல், கலாசாரம் மற்றும் நவநாகரீகம் தொடர்பான திருவிழாவாக அமைந்துள்ளது.
ஷொப்பிங் காலம் ஆரம்பமாவதை தொடர்ந்து, நத்தார் மற்றும் தமிழ், சிங்கள புதுவருட காலப்பகுதியை தொடர்ந்து பெப்ரவரி மாதமும் மிகவும் வேலைப்பழு நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
இலங்கையின் சகல பிரதான ஷொப்பிங் நிலையங்களையும் ஒரே வலையமைப்பின் கீழ் இணைத்துள்ள உறுதியான அமைப்பான Foxhouze இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், பல்வேறு விற்பனையாளர்கள், நிகரற்ற விலைக்கழிவுகள் 15 வீதத்துக்கும் அதிகமாக வழங்கப்படும்.
2015 பெப்ரவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை, சகல அம்சங்களையும் உள்ளடக்கியதாக, மிகவும் ஆச்சரியமூட்டும் அனுபவமாக அமைந்திருப்பதற்கு Foxhouze திட்டமிட்டுள்ளது.
SLASH என்பது, பாரிய விற்பனை மற்றும் விலைக்கழிவு ஷொப்பிங் கொண்டாட்டமாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் ஈடுபாடு மற்றும் இலங்கையின் பிரதான ஷொப்பிங் நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து, விற்பனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஷொப்பிங் நிலையங்கள் மற்றும் தொகுதிகள் போன்றன நிகழ்வின் மத்திய கவனிப்பு பகுதிகளை கொண்டனவாக அமைந்திருக்கும் என்பதுடன், பாரியளவிலான விற்பனையாளர்கள் மற்றும் பன்முக விற்பனை நிலைய விற்பனையாளர்களையும் கொண்டுள்ளது.
விற்பனையாளர்கள் இந்த பிரதான நகரங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பதன் மூலமாக, விலைக்கழிவுகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சலுகைகள் ஆகியவற்றுடன் வெவ்வேறு களிப்பூட்டும் நிகழ்ச்சிகளையும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளனர்.
SLASH திருவிழா என்பது களியாட்டாம், களிப்பு, விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகள் ஆகியவற்றை ஒன்லைன் ஊடகங்கள், சமூக இணைய ஊடகங்கள், வானொலி மற்றும் பத்திரிகை வாயிலாக நேரடியாக முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு மேலாக விற்பனைகள் இடம்பெறும் பகுதிகளில் நுகர்வோரின் ஈடுபாட்டை பேணும் வகையில் செயற்படுத்தல்களையும் முன்னெடுக்கவுள்ளது.
உத்தேசிக்கப்பட்ட பகுதிகளில் கொழும்பில் Majestic City மற்றும் Crescat Boulevard, கண்டியில் கண்டி சிற்றி சென்ரர், ஜா-எலயில் K Zone மற்றும் மொரட்டுவையில் K Zone மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் இதர திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில் சுதந்திர சதுக்க ஆர்கேட், ரேஸ் கோர்ஸ், டச்சு வைத்தியசாலை, பாரியளவிலான விற்பனையகங்கள், இதர சினிமா நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்கள் போன்ற உள்ளடங்கியுள்ளன.
SLASH திருவிழாவில் உள்ளடக்கப்படும் துறைகளில், நவநாகரீகம், விளையாட்டு, இலத்திரனியல், கையடக்க தொலைபேசிகள், களியாட்டம், வாழ்க்கைப்பாணி, இல்லம், அழகியல், சுகாதாரத்துறை மற்றும் ஆரோக்கியம், ஆபரணம் மற்றும் மாணிக்கக்கல், புத்தக நிலையங்கள், பல்சரக்கு, அழகியல் பொருட்கள், வீட்டுப்பாவனை பொருட்கள், உணவகங்கள், உணவு, விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றின் மூலம் பரந்த பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டிருக்கும்.
இந்த திருவிழாவின் மூலமாக, வாடிக்கையாளர்களை அதிகளவு விற்பனை நிலையங்களுக்கு கவர்வதற்கான செயற்பாடுகளும், பல நூற்றுக்கணக்கான மேலதிக விற்பனையாளர்களை கவரும் வகையிலும், விற்பனையாளர்களுக்கு நாளாந்தம் பல ஆயிரக்கணக்கில் மேலதிக வியாபாரத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அனுசரணை வழங்குவோருக்கும் தமது வியாபார வாய்ப்புகளை போட்டிகரத்தன்மை வாய்ந்த வகையில் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஷொப்பிங் திருவிழா என்பது உறுதியான களியாட்டம் மற்றும் நிகழ்வுகள் அம்சங்களை கொண்டமையவுள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்ட காட்சிகூடங்கள், மேலைத்தேய மற்றும் இலங்கை, இந்திய நடனங்கள், உயர்தர நவநாகரீக காட்சிகள், சர்வதேச கலாசார நிகழ்வுகள், பாடகர்கள், பாடல் வாத்தியக்குழுக்கள், வீதிகளியாட்டங்கள், னுதுக்கள், வானொலி நிலையங்கள் மற்றும் நேரடி இசை, விசேட செயற்பாடுகள் மற்றும் நாட்டியங்கள், போட்டிகள் மற்றும் பரிசுகள் போன்றன வழங்கப்படவுள்ளன.
அதிகளவு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் போன்றன விற்பனையாளர்களுக்கும், விஜயம் செய்வோருக்கும் உள்ளடக்கப்படவுள்ளதுடன், ஷொப்பிங் செயற்பாடுகள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேலதிக ஊக்குவிப்புகளும் பிரதான வானொலி நிலையங்களினூடாகவும், அச்சு ஊடகங்களின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல், ஒன்லைன், வெளிக்கள ஊடகம் மற்றும் நேரடி காட்சி பதிவு ஊக்குவிப்புகளும் வழங்கப்படவுள்ளன.
உறுதியான டிஜிட்டல் ஊடக ஊக்குவிப்பு செயற்பாடுகள் காட்சிப்படுத்தல் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
சில்லறை மற்றும் நவநாகரீகம், ஷொப்பிங் தொடர்பான பரந்த அனுபவம் மற்றும் விற்பனை சூழல்கள் போன்றவற்றின் மூலம், நாடு முழுவதிலுமிருந்து பங்குபற்றும் சகல தரப்பினருக்கும் அதிகளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை குழஒhழரணந மேற்கொள்ளும். நாட்டின் முன்னணி விற்பனை ஊடக முகாமைத்துவ நிறுவனம் எனும் வகையில் உள்ளக விளம்பர உற்பத்தியகம் மற்றும் டிஜிட்டல் ஊடக முகவர் அமைப்பையும் கொண்டுள்ளது.
இந்த திருவிழாவில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களை Slashfestival@foxhouze.com எனும் மின்னஞ்சல் ஊடாக அல்லது 0719091010 மற்றும் 0755637411 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.