2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்த ஆண்டில் 13 நிறுவனங்கள் பொது பங்கு வழங்கலுக்கு தயாராகின்றன

A.P.Mathan   / 2014 மார்ச் 10 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டில் மொத்தமாக 13 நிறுவனங்கள் பொது பங்கு வழங்கலின் மூலமாக பங்குப்பரிவர்த்தனையில் தம்மை பட்டியலிட்டுக் கொள்ள தயார்ப்படுத்தி வருவதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள், எதிர்வரும் ஒரு சில மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனவும், சிறிய மற்றும் மத்தியளவு வியாபாரங்களை பட்டியலிடுவதற்கு வேறான பலகை ஒன்றை நிறுவுவது பற்றியும் தாம் ஆராய்ந்து வருவதாக கொழும்பு பங்குச்சந்தையில் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகளவு ஈடுபாட்டை கொண்ட நிறுவனங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .