2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பிரட்பி ஷீல்ட் 2ஆம் கட்ட போட்டிகளுடன் கைகோர்க்கும் PRO

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல்தர ஆடவர் அழகுசாதன வர்த்தக நாமமான PRO, அண்மையில் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற பிரட்பி ஷீல்ட் 2ஆம் கட்ட போட்டிகளுடன் கைகோர்த்திருந்தது. 

இது குறித்து PRO வர்த்தக நாம முகாமையாளர் நாலக பெரேரா கருத்து தெரிவிக்கயில், 'ரக்பி நாட்காட்டியில் கண்டியில் இடம்பெறும் பிரட்பி போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்து வரும் விளையாட்டு எனும் வகையில், 2ஆம் கட்ட போட்டிகளில் எமது பிரசன்னம் என்பது PRO தெரிவுகளின் விசேட இயல்புகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதுடன், நவீன காலத்தின் ஆடவர்களின் அதிகரித்துச் செல்லும் அழகியல் தொடர்பான கேள்விகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது' என்றார்.

இந்த போட்டியை காண வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு உறுதியான, ஈரலிப்பான மற்றும் உயர்ந்தளவு அழகியல் நுட்ப முறைகள் பற்றிய விளக்கங்கள் PRO புதிய ஜெல் தெரிவுகளின் அனுசரணையின் மூலம் வழங்கப்பட்டிருந்தன.

சாதாரணமான நபருக்கு உகந்த வகையில் மெந்தோல் உள்ளடக்கத்தை கொண்ட PRO 'Wet Shine' சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இந்த வெட் லுக் என்பது, கூந்தலுக்கு மேலதிக பளபளப்பை வழங்குகிறது. இலங்கையின் காலநிலையை கருத்தில் கொண்டு, PRO குழுவினர் 'Firm Hold' எனும் தெரிவையும் அறிமுகம் செய்துள்ளனர். UV கதிர்களிலிருந்து பாதுகாக்கும் அம்சங்களை கொண்ட இந்த ஜெல் தெரிவு, நாளாந்த பாவனைக்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. உயர்மட்ட கூந்தல் அழகுபடுத்தல் தேவைகளுக்காக 'Extreme Firm Hold' என்பது மற்றுமொரு தெரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கோதுமை புரதம் அடங்கியுள்ளதால், கூந்தலுக்கு அவசியமான போஷாக்கையும் வழங்குகிறது. சகல PRO கூந்தல் ஜெல் வகைகளும் உயர் பொலிமர்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன, இவை கூந்தல் அழகுபடுத்தலை இலகுவாக்குவதுடன், எளிமையாக்குகிறது.
   
மேலும் இந்த போட்டிகளை பார்வையிட வருகை தந்திருந்த ஆடவர்களுக்கு, PRO styling booth பகுதியில் தமது கூந்தலை அழகுபடுத்தியிருந்ததுடன், கூந்தலுக்கும், முகத்துக்கும் வர்ணம் பூசியிருந்தனர்.

இளம் ஆடவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்படும் PRO தயாரிப்புகளில் Eau de Toilette, cologne, aftershave, Deo Body Spray மற்றும் Hair-Gel போன்றன உள்ளடங்கியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X