2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வட பிராந்தியத்துக்கு 30 பில்லியன் ரூபா தனியார் முதலீடு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 01 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட பிராந்தியத்துக்கு இதுவரையில் 30 பில்லியன் ரூபா தனியார் முதலீட்டை பெற்றுள்ளதாகவும், இதில் 32 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 18 திட்டங்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷமன் அபேவர்தன குறிப்பிட்டார்.
 
இதுவரை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள திட்டங்களின் பெறுமதி 11 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதுடன், மேலும் 21 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
இந்த 32 திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அவற்றிலிருந்து மொத்தமாக 7,000 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வட பிராந்தியத்தில் காணப்படும் வேலையில்லா பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X