2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் தமது 30ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் ஹார்பிக்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முதன்மை கழிவறை தூய்மையாக்கி வர்த்தகநாமமான ஹார்பிக், இலங்கையில் தனது 30 ஆவது ஆண்டுப் பூர்த்தியை கொண்டாடுகிறது. இலங்கையில் தனித்துவம் வாய்ந்த கழிவறை சுத்திகரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்தல் மற்றும் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் சுகாதாரமான கழிவறை சுத்தம் குறித்த பழக்கவழக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதில் முதன்மையாளராக ஹார்பிக் வர்த்தகநாமம் செயற்பட்டு வருகிறது.
 
உலகளாவிய ரீதியில் 100 ஆண்டுகால வரலாற்றை ஹார்பிக் கொண்டுள்ளது. 1920 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஹரி பிக்கப் என்பவரினால் வடிவமைக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது தூய்மையாக்கி இதுவாகும். தற்போது ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் மூலம் உலகம் முழுவதும் ஏறத்தாழ 76 நாடுகளில் இத் தயாரிப்பு விற்பனை செய்யப்படுகிறது.
 
இலங்கையில் 1984 ஆம் ஆண்டு தமது செயற்பாடுகளை ஆரம்பித்த ஹார்பிக் அன்று முதல் சந்தையில் கழிவறை தூய்மையாக்கியாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. கடந்த 3 தசாப்தங்களில் சந்தையின் பெரும்பங்கினை ஹார்பிக்கினால் கைப்பற்ற முடிந்துள்ளதுடன், இலங்கையின் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளை பிரதிபலிக்கும் இலங்கையரின் வாழ்;வுடன் இவ் வர்த்தகநாமம் ஒன்றிணைந்துள்ளது. கழிவறை பராமரிப்பு பிரிவில் இந்த வர்த்தகநாமத்தின் பிரதிபலிப்பு எவ்வாறெனில், இலங்கை வாடிக்கையாளர்கள் கழிவறை சுத்தமாக்கிகளை கொள்வனவு செய்யும் போது ஹார்பிக் பெயரை குறிப்பிட்டு வாங்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. 
 
'வாழ்வதற்கேற்ற சுகாதாரமானதும், பாதுகாப்பானதுமான இடமாக இலங்கையை மாற்றுதல்' எனும் அதன் உறுதிப்பாட்டின் விளைவாக இலங்கையின் கழிவறை தூய்மையாக்கி நிபுணராக தம்மை நிலைத்திருக்கச் செய்ய முடிந்துள்ளது. மேலும் கடந்த 2013 இன் அரையாண்டில் இடம்பெற்ற பல்வேறு சமய திருவிழாக்களில் நடமாடும் கழிவறை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் 'ஹார்பிக் சனிபாரக்ஷக சேவய'(ஹார்பிக் சுகாதாரச் சேவைகள்) எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை மற்றும் கண்டி பெரஹெரா சீசன் வரை இச்சேவை நீடிக்கப்பட்டதுடன், ஹார்பிக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மிகவும் நேர்த்தியான CSR திட்டம் இதுவாகும்.
 
சுத்தமான கழிவறைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கடந்த 3 தசாப்தங்களாக ஹார்பிக் வர்த்தகநாமம் மூலம் நாடுமுழுவதும் பல்வேறு நுகர்வோர் கல்வி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு 100,000 இற்கும் மேற்பட்ட வீடுகளை ஹார்பிக் சென்றடைய முடிந்துள்ளது. 

'கடந்த 30 ஆண்டுகளாக சந்தை முன்னோடியாக எம்மை நிலைத்திருக்கச் செய்து எமது வர்த்தகநாமம் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். வாடிக்கையாளர்களின் பிந்தைய கொள்வனவுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் மேம்படுத்தல்களுடன், எமது வர்த்தகநாமம் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் அதே அனுபவத்தை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என இலங்கையில்; ஹார்பிக்கின் 30 ஆண்டுகால பிரசன்னம் குறித்து விளக்கமளித்த சந்தைப்படுத்தல் தலைவர் டன்சீம் ரெஸ்வான் தெரிவித்தார்.
 
இலங்கையின் கழிவறை பராமரிப்பு முன்னோடியாக ஹார்பிக் வர்த்தகநாமம், “Harpic Power Plus Original”, “Harpic Fresh Pine”, “Harpic Fresh Floral” மற்றும் “Harpic Fresh Citrus” போன்ற 500ml போத்தல்களுக்கு 30 ரூபா விலைக்கழிவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
 
தங்களது 30 ஆண்டுப் பூர்த்தி கொண்டாட்டங்களுக்கு இணையாக, மற்றுமொரு நடவடிக்கையாக கடந்த வருடம் தமது CSR திட்டத்தின் ஓர் விரிவுபடுத்தலாக 'ஹார்பிக் சனிபாரக்ஷக சேவய' எனும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்திருந்தது. 2014 ஆம் ஆண்டில் வருடம்  முழுவதும் கலாசாரம் மற்றும் சமய நிகழ்வுகளை இலக்காகக் கொண்டு நாடுமுழுவதும் இத் திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .