2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மொத்தப்புரள்வு பெறுமதி 600 மில்லியன் ரூபாவாக சரிவு

A.P.Mathan   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ், கார்சன்ஸ் கம்பபெட்ச் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகிய பங்குகள் மீதான ஈடுபாட்டின் காரணமாக, இந்த வாரம் நேர்த்தியான பெறுமதியில் ஆரம்பமாகிறது. ஆயினும், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக மொத்தப்புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்திருந்த நிலையில், நேற்றைய தினம் 600 மில்லியன் ரூபாவை மட்டுமே எய்தியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது மொத்த வியாபாரங்கள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தன. மேலும், யூனியன் வங்கி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது கலப்பு பெறுமதிகள் பதிவாகியிருந்தன. 
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத்துறை அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹேலீஸ் பங்குகளின் பங்களி;ப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.70% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 5.00 (2.10%) ரூபாவால் அதிகரித்து 243.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. ஹேலீஸ் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 294.10 ரூபாவாக பதிவாகியிருந்தது.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் மற்றும் த ஃபினான்ஸ் வாக்குரிமையற்ற பங்குகளின் பங்களி;ப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.18% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 0.30 (9.09%) ரூபாவால் அதிகரித்து 3.60 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 18,657,400 பங்குகளால் குறைநடைந்திருந்தது. த ஃபினான்ஸ் கம்பனி வாக்குரிமையற்ற பங்கொன்றி விலை 0.10 ரூபாவால் (1.25%) சரிவடைந்து 8.10 ரூபாவாக பதிவாகியிருந்தது.
 
செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. இதன் பெறுமதி மாற்றமின்றி 280.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .