
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது 2013 ஜூன் 30ஆம் திகதியன்று முடிவடைந்த முதல் 6 மாத காலப்பகுதியில் வரிக்கு பின்னரான இலாபமாக 78 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதன் மூலம் மீண்டுமொருமுறை தமது நட்சத்திர செயற்பாடுகளை நிலைநாட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டின் வரிக்கு பின்னரான இலாபமான ரூபா 178 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 316 மில்லியனை பதிவு செய்துள்ளது.
இச் சாதனை ரூபா.1.9 பில்லியன் பெறுமதியான திடமான உரிமைக்கோரலை கௌரவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கள் மற்றும் வர்த்தகநாம பங்கினை கட்டியெழுப்புதல் போன்ற இரண்டிலும் உரிமைக்கோரல் மேலாண்மை மற்றும் பணம் அளித்தல் போன்றன நெருக்கடி மிக்க செயற்திறன் இயக்கிகளாக உள்ளன.
கடந்த 2012 டிசெம்பர் மாதம் தொடக்கம் மொத்த சொத்துக்கள் 17.1 பில்லியன் ரூபாவாக பதிவாகி 8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்றிணைக்கப்பட்ட மொத்தமாக வழங்கப்பட்ட தவணைக் கட்டணத்தின் பெறுமதி ரூபா 4.3 பில்லியனாகவும், ஆயுட் காப்புறுதி 11 சதவீத வளர்ச்சியையும், ஆயுள் சாரா காப்புறுதி 12 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. முதலீடுகள் மற்றும் இதர வருமானங்களில் பதிவாகியிருந்த 75 சதவீத வளர்ச்சியானது வெற்றிகரமான அரையாண்டு செயற்பாடுகளின் திடமான முதலீட்டு வியூகத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
ஒத்தக்காப்புறுதி நிறுவனக் குழுமங்களுக்கிடையே அதியுயர் வரிக்கு பின்னரான இலாபத்தினை ஜனசக்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு நிறுவனம் பதிவு செய்த சிறந்த வரிக்கு பின்னரான இலாபத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.
நாம் அதிகமான உரிமைக்கோரல்களை வழங்கி வருகிறோம். இது எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகிறது'. எமது செயற்திறன்கள் மற்றும் வளமான எதிர்காலத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்' என நிதிக்கூற்றுக்கள் குறித்து ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
ஆயுள் மற்றும் பொது காப்புறுதி பிரிவில் எமது வலுவான வளர்ச்சி மற்றும் ஆயுள் பிரிவில் எதிர்பார்க்கப்பட்ட உறுதியான இரட்டை இலக்க வளர்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது விற்பனை ஒழுக்கத்திற்கு ஊக்கமளித்துள்ளதுடன், தெரிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஜனசக்தியானது தற்போது துறையில் சிறந்த வேலை வழங்குநராக மாற்றமடைந்துள்ளது.
'மிகச் சிறந்தவற்றை ஈர்த்தல் மற்றும் தக்க வைப்பதில் ஒருங்கிணைக்கப்படுவதே எமது வெற்றிக்கு பிரதான காரணமாகும். வர்த்தகநாம உத்திகளை மீள நிலைப்படுத்தல் மற்றும் ஓய்வூதிய பிரிவில் புத்தாக்க உற்பத்தி அறிமுகம் போன்றவற்றிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உரிமைக்கோரல் மேலாண்மை ஆகியன ஒட்டுமொத்த விநியோகத்திற்கும் உதவி புரிகிறது' என மேலும் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
இந் நிறுவனமானது அனைத்து பொதுக்காப்புறுதி பிரிவுகளிலும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எமது மோட்டார் வர்த்தகம் சிறந்த சேவையை கொண்டுள்ளது. சொந்தமாக கராஜினை கொண்டுள்ள ஒரே காப்புறுதி வழங்குநர் எமது நிறுவனமாகும். எமது 24 மணிநேர அழைப்பு மையங்கள் மற்றும் நாடு முழுவதுமுள்ள மதிப்பீடு வலையமைப்பு மற்றும் வாகன அவசரச் சேவைகள் போன்றன ஃபுல் ஒப்ஷன் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவியாக அமைந்துள்ளது. தற்போது நாம் இலங்கை நுகர்வோரின் மாறுபட்ட தேவைகளுக்கு இணையற்ற தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாக உறுதிப்படுத்தி ஆயுட்பிரிவில் உற்பத்தி வரிசைகளை விருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். காப்புறுதி செயலிழந்த பின்னரும் கூட, மருத்துவமனை காப்பீட்டை வழங்கும் உலகின் முதலாவதும், ஒரேயொரு தயாரிப்பாகவும் எல்லையற்ற ஆயுள் தயாரிப்பு அமைந்துள்ளது.
ஜனசக்தி லைஃவ்சேவர் திட்டமானது முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், இலங்கையின் வயது முதிர்ந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய அனுகூலங்களை அனுபவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. இது சந்தையில் வயது வரையறைகள் எதுவுமின்றி, உரிய நேரத்தில் தனிநபர்களுக்கு நிதிசார் தீர்வுகளை மாதாந்த ஓய்வூதியமாக வழங்கும் வகையில் ஒரு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனசக்தி நிறுவனமானது M-Insurance முன் முயற்சிகள் ஊடாக உற்பத்திகள் மற்றும் சேவை புத்தாக்கங்களில் மொபைல் தொழில்நுட்ப திறனை காட்டும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடுகளையும், புதிய களங்கள் மற்றும் சந்தை விருத்திகளையும் வழிநடத்திச் செல்கின்றது.
ஜனசக்தியானது மொபிடெல் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக ஆயுள் காப்புறுதி திட்டத்தையும், டயலொக் Axiata இல் 175 ரூபாவில் ஒருநாள் 50,000 அமெரிக்க டொலர்கள் உள்ளடக்கிய சுகாதார உரிமைக்கோரலுக்காக உலகின் முதல் M-Travel உற்பத்தியை அறிமுகம் செய்துள்ளது.
ஜனசக்தியானது நாட்டின் அனைத்து மூலைகளிலும் ஒரு பரந்த கிளை வலையமைப்பினை கொண்டுள்ளது. இந் நிறுவனம் தமது சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஓரங்கமாக, நீர் மேலாண்மை மற்றும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவினை வழங்கி வருகிறது. ஜனசக்தியின் அசாதாரண செயற்திறனானது சந்தை தேவைகளுக்கேற்ற வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. எமது நிறுவனத்தின் வாக்குறுதியை 'மனதிற்கு சக்தி' ஆக புதுப்பித்துள்ளோம். இந்த பெருநிறுவன மதிப்பு முன்மொழிகள் மூலமாக எமது வாடிக்கையாளர்களின் முக்கியமான தேவைகளை நிறைவேற்ற முடிந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நடத்தைகள் மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மனதிற்கு சக்தி ஊடாக இத்துறையின் சேவைத்தரம், சந்தைப்படுத்தல் சேனல்கள் மற்றும் உற்பத்தி புத்தாக்கம் போன்வற்றை மேம்படுத்த முடியும் என எண்ணுகிறோம்.
ஜனசக்தியானது தமது வணிக செயல்பாட்டிற்கு அவசியமான மூலதனத்தை காட்டிலும் சுமார் 8 மடங்கு மூலதனத்தை பெற்று ஆரோக்கியமான மூலதன கட்டமைப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இந் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ள காப்புறுதி கம்பனிகளிடையே அதியுயர் செலுத்திய பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது.