
இலங்கையின் சர்வதேச வினாக்கள் தொடுக்கும் சம்மேனளத்தின் (IQA) மூலம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 'IQAவிஸ்டம் அல்டிமேட் குவிஸ் சலேன்ஜ்' புதிர்போட்டியில் 99X Technology இணை வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் செப்டெம்பர் 14ஆம் திகதி இந்த புதிர்போட்டி தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அணிக்கு 5 பேரைக் கொண்ட 40 அணிகள் போட்டியில் பங்கேற்றிருந்தன. இவற்றில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தனிநபர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
(IQA)வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ருவன் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் புதிர்போட்டிகளில் வீடியோ மற்றும் ஓடியோ முறையிலான கேள்விகளை அறிமுகம் செய்ததில் நாம் முன்னோடிகளாக திகழ்கிறோம். வினாக்களை தொகுப்பவராக நான் எப்போதும் IQAவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தராதரங்களுக்கு அமைவாக செயற்பட முயற்சி செய்வேன். IQA விதிமுறைகளுக்கும் தராதரங்களுக்கும் அமைய இடம்பெறும் ஒரேயொரு புதிர் போட்டியாக இது அமைந்துள்ளது' என்றார்.
இந்த வெற்றி தொடர்பாக 99X Technology நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோசேகரம் கருத்து தெரிவிக்கையில், 'எமது அணியினர் IQAவிஸ்டம் அல்டிமேட் குவிஸ் சலேன்ஜ்' புதிர்போட்டியில் பங்குபற்றி இணை வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டமை குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். தகவல் தொழில்நுட்பத்துறையில் சிந்தனை முன்னிலையாளர்களாக திகழும் நாம், உலகளாவிய ரீதியில் மென்பொருள் வடிமைப்பு சேவைகளை மட்டும் வழங்குவதை நோக்காக கொண்டிராமல், எமது திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்திவருகின்றமைக்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது' என்றார்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற கடும் போட்டியை தொடர்ந்து, 99X Technology அணியினருடன் மேலும் இரண்டு அணிகள் முன்னிலையில் திகழ்ந்திருந்தன. டயலொக் அணி மற்றும் IFS அணி ஆகியன ஏனைய அணிகளாகும். சகல பிரிவின் வெற்றியாளராக சாமர சுமனபாலவின் அணி தெரிவுசெய்யப்பட்டிருந்தது. ரோயல் கல்லூரி அணி A மற்றும் HNB அணி A ஆகியனவும் வெற்றியீட்டியிருந்தன.
99X Technologyயை சேர்ந்த அணியில் சிராந்த டி அல்விஸ் (அசோசியேட் டெக் லீட் மற்றும் குழுத் தலைவர்), இவந்தசெனவிரத்ன (சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளர்), ரங்கித குருப்பு (பயிலுநர் மென்பொருள் பொறியியலாளர்), ரவிந்து மதநாயக்க (உட்கட்டமைப்பு முகாமைத்துவ பொறியியலாளர்) மற்றும் நவகநவரட்ன (செயற்பாடுகள் முகாமைத்துவ அசோசியேட்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த புதிர் போட்டி மொத்தமாக 50 வினாக்களை கொண்டிருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 10 வினாக்கள் வீதம் கேட்கப்பட்டிருந்தன. நடப்பு விவகாரம், விளையாட்டு, பொதுஅறிவு, கோள்கள் மற்றும் பிரபஞ்சம் மற்றும் கலை இலக்கியம் மற்றும் களியாட்டம் போன்ற தலைப்புகளில் வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.