2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தகவல் தொழில்நுட்பத்தில் Foundation சான்றிதழ் கற்கைநெறியை வழங்கும் SLIIT கல்வியகம்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIIT கல்வியகமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் அல்லது மென்பொருள் பொறியியல் துறையில் வெளிநாட்டு பட்டதாரி கற்கைநெறியை தொடர்வதற்கு தகைமையாக தகவல் தொழில்நுட்பத்தில் Foundation சான்றிதழ் (FCIT) கற்கைநெறியை வழங்கி வருகிறது. இந்த கற்கைநெறியை UK Edexcel, கர்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து SLIIT கல்வியகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IT, வர்த்தகம் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டதாரி கற்கைகளை வழங்கிவரும் SLIIT கல்வியகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகத்தின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ளது.
வெற்றிகரமாக ஒருவருட கற்கைநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் குழரனெயவழைn சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இரண்டு வருடங்களை நிறைவு செய்யும் மாணவர்கள் IT டிப்ளோமா சான்றிதழை பெற முடியும். இந்த டிப்ளோமா சான்றிதழை பெற்ற மாணவர்கள் SLIIT இனால் நடத்தப்படும் கர்டன் பல்கலைக்கழகத்தின் IT/ மென்பொருள் பொறியியல் பட்டதாரி கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பினை பெறுவர்.

'முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து பல்வேறு கல்வி திட்டங்களை முன்னெடுத்து வரும் SLIIT கல்வியகத்தின் ஓர் திட்டமாக Foundation சான்றிதழ் IT கற்கைநெறி விளங்குகிறது. இக் கற்கையை பூர்த்தி செய்யும் மாணவர்கள் வெளிநாட்டு பட்டதாரி கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பை பெறலாம்;' என SLIIT இன் தலைவர் பேராசிரியர்.எஸ்.கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த FCIT கற்கையை தொடர்வதற்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (இலங்கை) ஒன்று அல்லது ஒரேஅமர்வில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் சாதாரண சித்தி உள்ளடங்கலாக குறைந்தபட்சம் ஆறு பாடங்களில் சித்தி பெறல் அல்லது சாதாரண தர பரீட்சையில்(இலண்டன்) ஒரே அமர்வில் கணிதம் சார்ந்த ஒரு பாடம்; மற்றும் ஆங்கிலம் பாடங்களில் சாதாரண சித்தி உள்ளிட்ட குறைந்தபட்சம் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் தகுதியாக கொள்ளப்படுகிறது.

'க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தற்போது கர்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி கற்பதற்கான தொழிற்துறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்திற்கான கல்வி தகுதியை பெறத்தவறும் மாணவர்களுக்கு இந்த தனிப்பட்ட முன் பல்கலைக்கழக கற்கைநெறியை SLIIT வழங்கி வருகிறது' என SLIIT இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர்.லலித் கமகே தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை 7544802/ 2301904 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது pdc@sliit.lk இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .