.jpg)
300,000க்கும் அதிகமான அங்கத்தவர்களை கொண்ட அதிகளவு வரவேற்பை பெற்ற லோயல்டி திட்டமான Nexus, கீல்ஸ் சுப்பர் மற்றும் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றினூடாக பல்வேறு விசேட அனுகூலங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தனது அங்கத்தவர்களுக்கு தற்போது Nexus மொபைல் எனும் புதிய தீர்வையும் அறிமுகம் செய்துள்ளது. சகல அங்கத்தவர்களும் தற்போது விலைக்கழிவுகள் மற்றும் விசேட தள்ளுபடிகளைக் கொண்ட Nexus அனுகூலங்களை பாரம்பரிய அட்டையை வழங்குவதற்கு பதிலாக கையடக்க தொலைபேசி இலக்கத்தை வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
Nexus அங்கத்தவர்களுக்கு தற்போது Nexus புள்ளிகளை பெற்றுக் கொள்ளும், மற்றும் பயன்படுத்தும் வாய்ப்பு Nexus மொபைல் ஊடாக வழங்கப்படுகிறது. புதிய மொபைல் கட்டமைப்பின் மூலம் எந்தவொரு வலையமைப்பையும் சேர்ந்த எந்தவொரு மொபைல் இலக்கத்தையும் பிரத்தியேக Nexus இலக்கமாக பயன்படுத்த முடியும்.
Nexus மொபைல் திட்டத்தில் முதலாவதாக தன்னை பதிவு செய்தவராக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார திகழ்கிறார். Nexus அங்கத்தவர் செய்ய வேண்டியது, Nexus மொபைல் இலக்கமொன்றை கீல்ஸ் சுப்பர் காசாளருக்கு கையளித்து புள்ளிகளை பெற்றுக் கொள்ளவும், பயன்படுத்தவும் வேண்டும். இதன் போது அங்கீகாரத்தை கோரும் SMS ஒன்று குறித்த மொபைல் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை வாடிக்கையாளர் உறுதி செய்வதன் மூலம் புள்ளிகளை பயன்படுத்தலாம். இந்த அங்கீகரிக்கப்பட்ட இலக்கத்தை காசாளருக்கு Nexus அங்கத்தவர் வழங்குவதுடன் கொள்வனவு பூர்த்தி செய்யப்படும்.
Nexus மொபைல் அனுகூலங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் நெட்வேர்க்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நாலக உமகிலிய கருத்து தெரிவிக்கையில், 'எமது அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக Nexus இடமிருந்து என்ன அனுகூலங்களை எதிர்பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம்'.
'நாம் அனைவரும் மொபைல் யுகத்தில் எமது ஸ்மார்ட்ஃபோன்களுடன் வாழ்ந்து வருகிறோம். எமது கையடக்க தொலைபேசிகளுடன் நாளாந்த வாழ்க்கை என்பது பின்னிப்பிணைந்துள்ளது' என்றார்..
தனது அங்கத்தவர்களுக்கு மேலும் பொருத்தமான சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் தனது முன்னணி நிறுவனங்களை Nexus மீளமைத்து வருகிறது. தமது புள்ளிகளை வாடிக்கையாளர்கள் FlySmiLe milesகளாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.
குறுகிய காலப்பகுதியில், Nexus என்பது நட்புறவான, நாமமாக திகழ்கிறது. புள்ளிகள் சேகரிப்பு என்பது இலகுவாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பயன்படுத்துவது என்பது மிகவும் களிப்பூட்டுவதாக அமைந்துள்ளது. Nexus என்பது இலங்கையில் மிகவும் விரும்பப்படும் லோயல்டி திட்டமாக அமைந்துள்ளது.