
இந்த வசந்த காலத்தில் டிரையம்ப் நிறுவனமானது உள்நாட்டு சந்தையில் ரீ-சேர்ட் பிரா வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் பெண்களின் சௌகரியம் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளாந்த நடவடிக்கைகளின் போது பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரா வகைகள் 'மிருதுவான தன்மை' இனை அடிப்படையாக வைத்து வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய மூன்று பிரா வகைகள், அதியுயர் சௌகரியத்தை உறுதி செய்யும் வகையில் மென்மையான, மிருதுவான துணியால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரா வகைகள் மிகச்சிறந்த micro fibre fabric மற்றும் euro-jersey துணியினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை மற்றும் இந்தியப் பெண்களுக்கு பொருந்தும் வகையிலும், அழகிய உடற்;தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த புதிய அறிமுகம் குறித்து டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'எம்மால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிரா வகைகள், பெண்களுக்கு சௌகரியத்தை வழங்கியதுடன், அவர்கள் தமது உடலமைப்பு பற்றி சிறப்பாக எண்ணுவதற்கும் வழிவகுத்துள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு அணிபவருக்கு தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதற்கான திறனை டிரையம்ப் உற்பத்திகள் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். எமது பிரா வகைகள் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் அழகினை வெளிப்படுத்த வேண்டியமை எமது கடமையாகும்' என்றார்.
'அண்மையில் இடம்பெற்ற மிலான் ஷோவில் Paisley printகள் பிரதான இடத்தை பிடித்திருந்தன. நவீன ஃபேஷன் போக்குகளை வெளிக்கொண்டு வந்ததில் டிரையம்ப் முன்னோடியாக செயற்பட்டமையிட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
காலத்திற்கேற்ப மாற்றமடையும் கேள்விகளுக்கு பொருத்தமான நவீன வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பத்திற்கமைய வடிவமைத்து தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள டிரையம்ப், இந்த வசந்த காலத்தில் அறிமுகம் செய்த ரீ-சேர்ட் பிரா வகைகள் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இலங்கைப் பெண்களின் உடலமைப்பிற்கு பொருத்தமான பிரா வகைகளை வடிவமைக்கும் ஒரேயொரு வர்த்தகநாமம் டிரையம்ப் ஆகும். பெண்கள் சௌகரியமாக தமது தினசரி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்பினை வழங்கி நாளினை மகிழ்ச்சியுடன் செலவிட உதவுவதுடன், பெண்களின் விருப்பத்திற்குரிய தயாரிப்பாகவும் டிரையம்ப் விளங்குகிறது.