2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'கலா பொல' கண்காட்சி ஜனவரி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

A.P.Mathan   / 2014 ஜனவரி 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியாக திகழும் 'கலா பொல 2014' ஆனது கொழும்பு 07, நெலும் பொக்குண மாவத்தையின் நடைபாதையோரங்களில் ஜனவரி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான ஊக்கமளிக்கும் பார்வையாளர்களுக்காக - ஓவியம் தீட்டுவோர், சிற்பக் கலைஞர்கள் மற்றும் கேலிச்சித்திர கலைஞர்கள் ஆகியோர் தமது ஆக்கத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளமையினால் கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் இவ் வீதியானது உயிரோட்டம் பெற்றுக் காணப்படும்.
 
அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகின்ற உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மேன்மைதங்கிய ஜொன்ங்-மூன் சொய் அவர்கள்  பிரதம அதிதியாக வருகை தரவுள்ளார். 
 
ஜோர்ஜ் கீற் மன்றம் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்ற 'கலா பொல' ஆனது, கடந்த 20 வருட காலப்பகுதியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு கலாசார நிகழ்வாக வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, இன்று கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் தவறவிடப்பட முடியாத ஒரு நிகழ்வாகவும் திகழ்கின்றது. 
 
'கலா பொல' கண்காட்சி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், அதே தினம் மாலை 10 மணி வரை இடைவிடாது தொடர்ச்சியாக 14 மணித்தியாலங்கள் பார்வையாளர்களுக்கென திறந்து வைக்கப்பட்டிருக்கும். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .