2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி லொத்தர் சபையின் 30வது ஆண்டு நிறைவு விழா

Kogilavani   / 2013 ஜூன் 16 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


அபிவிருத்தி லொத்தர் சபையின் 30வது ஆண்டு நிறைவு விழா இன்று காலை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் 250பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் துவிச்சக்கர வண்டிகள், வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காலிகள் என்பனவும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .