
மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் நிறுவனமானது மிக விரைவாக வளர்ச்சியடைந்து செல்லும் இலங்கையின் வாடிக்கையாளர் தளத்தில் புதிய Acer வின்டோஸ் 8 டெப்லட் தொடரிலான – Acer Iconia W3 மற்றும் Acer Aspire P3 ஆகிய கணினிகளை அண்மையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இலங்கையில் கிடைக்கக் கூடியதாகவுள்ள மிகவும் கட்டுப்படியான விண்டோஸ் 8 டெப்லட் கணினியாக திகழும் Acer Iconia W3 ஆனது, மைக்ரோசொப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்களின் கூட்டிணைவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 அங்குலமான Acer இன் இப்புதிய உற்பத்தி மைக்ரோசொப்ட் ஒபிஸ், எக்ஸெல் போன்ற மேசைக் (Desktop) கணணிகளில் உள்ள மென்பொருட்களுடன் முழுமையாக ஒத்திசைந்து இயங்கவல்லது என்பதுடன், 'விண்டோஸ் ஸ்டோர்' களஞ்சியத்தில் காணப்படுகின்ற 70000 இற்கும் அதிகமான பிரயோக மென்பொருட்களில் எந்தவொரு மென்பொருளோடும் ஒத்திசைவாக செயற்படக் கூடியதுமாகும்.
கடந்த காலங்களில் அறிமுகமான விண்டோஸ் 8 டெப்லட் ரக தனிநபர் கணினிகளைப் போலவே Iconia W3 கணினியும் முழுமையான விண்டோஸ் 8 அனுபவத்தை பாவனையாளருக்கு வழங்கும் முகமாக இன்டெல் அடொம் புரசெசரை அடிப்படையாகக் கொண்டியங்குகின்றது. ஏனைய சிறியரக டெப்லட் கணினிகளைப் போலன்றி, ஒற்றைக் கையினால் பயன்படுத்தக் கூடியவையாகவும் கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டெப்லட் கையடக்க உபகரணத்தை போன்றதாகவும் இது காணப்படுகின்றது.
பிரித்தெடுக்கக்கூடிய விசைப்பலகை இணைப்புக் கருவி (Dock) ஒன்றுடன் தொடர்பை ஏற்படுத்தியும் Iconia W3 இனை பயன்படுத்தலாம். ஆனால் அண்மைக் காலங்களில் வெளியான இணைப்புக் கருவியுடன் இயங்கவல்ல விண்டோஸ் டெப்லட்களைப் போலன்றி, இதனது விசைப்பலகையானது டெப்லட் உபகரணத்தை விடவும் குறிப்பிடத்தக்க அளவு பெரியதாகும். டைப் (தட்டச்சு) செய்வதில் மேலும் அதிகமான சௌகரியத்தை வழங்குவதே இதன் நோக்கமாகவுள்ளது, இணைப்புக் கருவிக்கான விசைப்பலகையின் உள்ளே டெப்லட்; இற்கான சேமிப்பக வசதி அமைந்துள்ளமையானது பயன்படுத்தாத நேரத்தில் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்க வசதியளிக்கின்றது.
மாற்றியமைக்கக் கூடிய புதிய Acer Aspire P3 Ultrabook ஆனது, மிகவும் சக்திவாய்ந்த டெப்லெட் கணினியாக திகழ்கின்ற அதேநேரம், பல்செயலாற்றல் கொண்ட உபகரணம் ஒன்றிலிருந்து ஒருவர் எதிர்பார்க்கின்ற அனைத்து சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் உள்ளடங்கியிருக்கின்ற Acer Aspire P3 Ultrabook கணினி Intel® Core™ i5 processor ஒரேநேரத்தில் பல்வேறுபட்ட சிக்கலான பணியிலக்குகளை கையாள்வதற்கான சக்தியை இக் கணினிக்கு வழங்குகின்றது. அதுமட்டுமன்றி விண்டோஸ் 8 Snap split திரையின் மூலம் இது மேலும் பல சாத்தியக்கூறுகளை கொண்டு வருகின்றது. அதாவது, நபரொருவர் பிரயோக மென்பொருட்களுக்காக காத்துக் கொண்டிருக்காமல் ஒன்றிலிருந்து- மற்றொன்றுக்கு மாறிக் கொள்வதற்கு இது இடமளிக்கின்றது.
10-Point தொடுதிரையானது ஒருவரது அனைத்து செயற்பாடுகளையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டதாகும். இடைவெளி விட்டமைந்த அழகிய பரந்த விசைப்பலகையானது முக்கியமான மின்னஞ்சல்களை டைப் செய்வதற்கு அவசியமான முழுமையான சௌகரியத்தையும் அளிக்கின்றது. இது, கணினி மாதிரிகளை மீள் வரையறை செய்வது மட்டுமன்றி தனிநபர் கணினிப் பயன்பாட்டில் புதியதொரு தலைமுறையின் தோற்றமாகவும் அமைகின்றது. மிக மிக மெல்லியதும் பாரம் குறைந்ததுமான Acer Aspire P3 கணினியானது, நபர் ஒருவர் செயல் விளைவுள்ள பணியிலக்குகளை மையமாகக் கொண்டு செயலாற்றுகையில் ஒரு Ultrabook ஆகவும், நபர் ஒருவர் உலவித் திரிவதற்கு உன்னதமான நெகிழ்ச்சித் தன்மையை நாடுகின்ற சந்தர்ப்பத்தில் ஒரு Tablet போலவும் தொழிற்படக் கூடியது.
மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரஞ்சன் டி சில்வா கூறுகையில், 'புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களை அனுபவிப்பது என்பது சந்தையில் சில துறைகளைப் பொறுத்தமட்டில் இன்று ஒரு கனவாக மாறியுள்ளது. உலகின் மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தை மிகவும் கட்டுப்படியான செலவில் அனுபவிப்பதற்கு இலங்கை நுகர்வோர்களுக்கு வசதியளிப்பதன் ஊடாக, இக் கனவை நனவாக்குவதே எம்முடைய தூரநோக்காக உள்ளது. அதனாலேயே பரந்துபட்ட வகைகளிலான மேற்படி விண்டோஸ் 8 டெப்லட் கணினிகளை இலங்கையில் அறிமுகம் செய்கின்றோம்' என்று தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா OEM பணிப்பாளரான பூஜித்த ராஜபக்ஷ கூறுகையில், 'ஒரு கம்பனி என்ற வகையில் சூழலுக்கு ஏற்றவாறு செயற்படும் முறைமை (Eco System) ஆனது, வாடிக்கையாளர் சேமிப்பகம் என்பதில் இருந்து – தொடர்பிணைக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் தொடர்ச்சியான சேவைக்கு முற்றுமுழுதாக மாறிக் கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் உலக சனத்தொகையின் இரு மடங்காக அதிகரிக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சந்தையில் அனைத்து விடயங்களிலுமே அதிகரித்த முக்கியத்துவத்தை பெறுவதாக விண்டோஸ் 8 தற்போது முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஒரு கம்பனி என்ற வகையில் அனைத்து உபகரணங்களின் ஊடாகவும் எமது பங்காளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் செயற்றிறன்மிக்க கணினிப் பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்' என்றார்.
'நாளாந்த செயற்றிறனை மேம்படுத்துவதற்காகவும் அதேபோன்று இலகுவான முறையில் தகவல்களை தேடியறிந்து கொள்ள பாவனையாளர்களுக்கு உதவுவதற்காகவும், விண்டோஸ் 8 தனிநபர் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான பிரயோக மென்பொருட்களை விருத்தி செய்யும் நோக்கில் உலகாளவிய உருவாக்குனர்களுடன் நாம் ஒன்றிணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் பொதுவாக கிடைக்கக் கூடிய விதத்தில் விண்டோஸ் 8 கணினிகளை அறிமுகம் செய்யும் முன்னோடிகளாக Acer மற்றும் மெட்ரோபொலிட்டன் நிறுவனங்கள் திகழ்வதை காணும்போது நான் மிகுந்த மன மகிழ்ச்சியடைகின்றேன். சந்தையை கவர்ந்திழுக்கும் உபாயத்தின் அடிப்படையில் Acer அறிமுகம் செய்யும் விண்டோஸ் 8 உட்பொருத்தப்பட்ட மாதிரிகளுள் ஒருசில உற்பத்திகளாக Acer Iconia W3 மற்றும் Acer Aspire P3 என்பன காணப்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல மாதிரிகள் சந்தைக்கு வருவதை பெரும்பாலும் நாம் காணக்கூடியதாக இருக்கும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இடம்நகரும் தன்மை, 'போகின்ற போக்கிலான' கணினிப் பயன்பாடு போன்ற உலகளாவிய புதிய போக்குகளுக்கு அமைவாக Acer தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. அதன்மூலம், Acer பயன்படுத்துனர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்கள் சௌகரியத்தை உணரும்படி செய்கின்றது. நபர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்திலுள்ள மேசைக் (டெஸ்க்டொப்) கணினியில் வேலை செய்வதற்கு சமமானதொரு சௌகரியத்தை இந்த விண்டோஸ் 8 தளமேடையானது வழங்குகின்றது. உண்மையாகவே மேற்படி இரு டெப்லட் கணினிகளும் புளுடூத் விசைப்பலகை, தொடுகை மற்றும் டைப் செய்தல் (Touch and Type) தொழிற்பாடு ஆகியவற்றை கொண்டுள்ளமையால், பயன்படுத்துவதற்கு முழுமையான மகிழ்ச்சியை தருவனவாக இவை மாற்றியமைக்கப்படுகின்றன' என்று பூஜித்த ராஜபக்ஷ கூறி முடித்தார்.