Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016 Lenovo - Abans அலைபேசி உதவியாளர்கள் ஒன்றுகூடல் மற்றும் உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு Ozo ஹொட்டலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் போது, 2014/2015 மற்றும் 2015/2016 ஆகிய வருடங்களில் மிகவும் சிறந்த முறையில் தமது இலக்குகளை அடைந்த விற்பனை முகவர் உதவியாளர்களுக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட்டதோடு, திறன்பேசி தொழில்நுட்பத்தின் புதியப் புரட்சியாகக் கருதப்படும் Lenovo Vibe அணிவகுப்பின் திறன்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக Lenovo நிறைவேற்று அதிகாரி சுதீன் மாதூர் கலந்து சிறப்பித்தார், அவருடன் Lenovo இந்திய தேசிய முகாமையாளர் சுனில் வர்மாவும் கலந்துகொண்டார். Abans PLC சார்பாக முகாமைத்துவப் பணிப்பாளர் டிடோ பெஸ்டோன்ஜி, துணைப் பணிப்பாளர் தினேஷ் பெரேராவும் கலந்துகொண்டனர். Lenovo Vibe தொடரின் திறன்பேசியை சுனில் வர்மா அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய அபான்ஸ் விற்பனை உதவியாளர்களுக்கு சர்வதேச சுற்றுலாக்களுடன் பெறுமதியானப் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
2014 / 2015ஆம் ஆண்டில் மிகச்சிறப்பான முறையில் தமது வெளிப்படுத்திய விற்பனை ஊக்குவிப்பாளர்களாகத் தரிந்து சிறிவர்தன (திலகவர்தன செலியூலர் சென்டர் - கிரிபத்கொடை) கயான் கோதாகொட (சிறிவர்தன அன்ட் சன்ஸ்) மற்றும் சுரங்க சந்தருவன் (நவோத்யா செலியூலர் - இரத்தினபுரி) ஆகியோர் பாரட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.
2015/2016 ஆகிய வருடத்துக்கான நிலக்ஷ ரூபசிங்ஹ (சம்பா ஸ்டோர்ஸ் - கண்டி) மொஹமட் நிப்ராஸ் (மொபைல் விஷன்) மற்றும் ரொஷான் சஞ்ஜீவ (ஸ்வர்ணா செலியூலர்) ஆகியோருக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. 2014 /2015 வருடத்துக்கான மிகச்சிறந்த விற்பனையை மேற்கொண்ட மிகச் சிறந்த விற்பனை ஊக்குவிப்பளாராக மொஹமட் நப்ராஸ் (மொபைல் விஷன், காலி) பாராட்டு பெற்றதோடு, 2015 / 2016ம் வருடத்துக்கான மிகச்சிறந்த விற்பனையாளர் என்ற பாராட்டை நிட்டம்புவை சவன செலியூலரின் ரொஷhன் சஞ்ஜீவ பெற்றுக்கொண்டார். 2014/ 2015 2ஆம் இடத்தை சமீர மதுஷங்க (ஒப்சேல் ஃபோன் கெலரி / மாலபே) பெற்றுக்கொண்டார்.
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago