Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் முன்னெடுத்திருந்த ஊக்குவிப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் “சிங்கர் Nawa Divi Thilina 2016” ஊக்குவிப்பின் பரிசுகளை வழங்கும் நிகழ்வு, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10 அதிர்ஷ்டசாலி தம்பதிகளுக்கு, அனைத்துச் செலவுகளும் அடங்கிய, 3 நாள் சிங்கப்பூர் சுற்றுலா ஒன்றையும் மாபெரும் பரிசின் வெற்றியாளருக்கு, ரூ. 1 மில்லியன் பரிசையும், சிங்கர் Nawa Divi Thilina என்ற தனது ஊக்குவிப்பின் மூலமாக வழங்கியுள்ளது.
2016 மே முதல் ஜுலை வரையான காலப்பகுதியில், திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு, இந்த ஊக்குவிப்பில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு, நாடெங்கிலுமிருந்து வியப்பூட்டும் வகையில், பெருந்தொகையான திருமண அழைப்பிதழ்கள் சிங்கருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கலில் நுழைந்துகொள்ளும் தகைமையைப் பெற்றுக்கொள்வதற்காக, 2016 ஜுலை 31 அன்று அல்லது அதற்கு முன்பதாக, தமது திருமண அழைப்பிதழ்களை நாடெங்கிலும் உள்ள எந்தவொரு சிங்கர் பிளஸ் காட்சிறையிலும் சமர்ப்பிக்குமாறு, புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் கேட்கப்பட்டிருந்தனர்.
இந்த ஊக்குவிப்புக்கு மேலதிகமாக, மே 1 ஆம் திகதியிலிருந்து ரூ. 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதிக்கு, சிங்கர் உற்பத்திகளைக் கொள்வனவு செய்த புதுமண தம்பதிகளுக்கு, தாங்கள் கொள்வனவு செய்தமையை உறுதிப்படுத்தும் வகையில் ரசீதை, அவர்களது திருமண அழைப்பிதழுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.
அவற்றை சிங்கர் காட்சியறைகளில் ஒப்படைப்பதன் மூலமாக, ரூ. 1 மில்லியன் என்ற மாபெரும் பரிசுத்தொகையை வெல்லும் போட்டியில் நுழைவதற்கான தகைமையை, அவர்கள் பெற்றிருந்தனர். தமது வாழ்வில் முக்கியமான தினத்துக்கு முகங்கொடுப்பதற்கு அவர்கள் தம்மை தயாராக்கிக் கொள்ள உதவியாக, தள்ளுபடிகள், வட்டியில்லா வாடகைக் கொடுப்பனவுத் திட்டங்கள், இணைந்த சலுகைகள் மற்றும் கடனட்டை சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகளையும் சிங்கர் அவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago