Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 14 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில், கொழும்பு Barefoot Galleryஇல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுடன் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் (JICA) அமைப்பு கைகோர்த்திருந்தது. அத்துடன் “Sari Connection” செயற்றிட்டத்தையும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து திரட்டியிருந்த அதன் பிரத்தியேகமான பொருட்களையும் காட்சிப்படுத்தியிருந்தது.
“Sari Connection” என்பது பிரத்தியேகமான செயற்றிட்டமாக அமைந்துள்ளதுடன், குறித்த சமூகங்களில் பெருமளவு வரவேற்பையும் பெற்றிருந்தது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் (JICA) அமைப்பின் பங்களிப்புடன் இந்தச் செயற்றிட்டம் ஜப்பானின் இலாபநோக்கற்ற அமைப்பான PARC மக்களுக்கிடையிலான ஒன்றிணைவு அமைப்பால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் செயற்றிட்டத்தினூடாக, மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட சாரிகளிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரிப்பு இடம்பெறுகிறது. இவற்றுக்கு பெருமளவு கேள்வியும் காணப்படுகிறது. அவர்களின் தயாரிப்பு தெரிவுகளில், மேற்சட்டைகள், காற்சட்டைகள், பொதிகள், அணிகலன்கள், குசன் கவர்கள் போன்றன அடங்கியுள்ளன. சமூகங்களில் இந்தத் தயாரிப்புகள் அதிகளவு புகழ்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பெண்களினால் இந்தத் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் ஆகியவற்றால் பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருந்த இப்பகுதி மக்களுக்கு இந்த செயற்றிட்டத்தினூடாக சுபீட்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயற்றிட்டத்தில், பயன்படுத்தப்பட்ட சாரிகள் நாடு முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்டு, அவை அழகிய ஆடைகளாகவும், அணிகலன்களாகவும் மெருகேற்றப்படுகின்றன. இந்தத் தயாரிப்புகளின் விற்பனையூடாக கிடைக்கும் வருமானம் என்பது, இந்தப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாச்சந்தைகளில் இந்தத் தயாரிப்புகள் அதிகளவு ஈர்ப்பைப் பெற்ற வண்ணமுள்ளன. லக்சல, லக்பஹான மற்றும் Barefoot காலி போன்ற விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
பயன்படுத்தப்பட்ட சாரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொதிகள் கைவினைப்பொருட்கள் உற்பத்தியின் அனுபவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வரஞ்சினி கருத்துத்தெரிவிக்கையில், தனக்குத் தனது குடும்பத்தாருக்கும் இந்தச் செயற்றிட்டம் பெரும் ஊக்கமாக அமைந்திருந்தது.
இந்தச் செயற்றிட்டம் என்னைப்போன்றப் பெண்களுக்கு எதிர்பார்ப்பை வழங்குகிறது. இந்த தையல் நடவடிக்கைகளின் மூலமாக, முல்லைத்தீவின் புஸ்பலதா தெரிவிக்கையில், வெவ்வேறு தையல் நுட்பங்களைப் பயில்வதற்கான வாய்ப்புக்கிடைத்திருந்தமையானது, தமக்கு இந்தக் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதிகளவு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago