
டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனமானது அதன் 'Butterfly' உள்ளாடைத் தெரிவுகளின் வெற்றியை தொடர்ந்து, அதன் தொகுப்பில் பல புதிய அம்சங்களை இணைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணினதும் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்துவதற்கான வாக்குறுதியை 'Butterfly' கொண்டுள்ளது. டிரையம்ப நிறுவனம், கடந்தாண்டு அதிநவீன மற்றும் புதுமையான தெரிவுகளை அறிமுகம் செய்திருந்தது.
இந்த ஸ்டைலான 'Butterfly Bra' ஆனது பெண்மையையும், உடல் தோற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையில் லேஸ் எம்பிராய்டரி செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரா வகை, அணிபவருக்கு அதியுயர் சௌகரியத்தை வழங்குவதோடு, பெண்களின் இயற்கையான வளைவுகளை மேம்படுத்திக் காட்டக்கூடிய நவீன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
45 degree butterfly wing, சீரான வடிவம் மற்றும் மெலிதான கோடுகள் போன்ற அம்சங்கள் இந்த பிரா அணிபவருக்கு சிறந்த தோற்றப்பாணியை வழங்குவதோடு, பட்டாம்பூச்சியின் தோற்றத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இந்த உள்ளாடையில் இரண்டு பூ லேஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. லேஸின் கீழ், வெளிப்படைத்தன்மையை குறைக்கும் வகையில் மென்மையான elastic power-net பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக தாங்குதலையும் வழங்குகிறது. இந்த பிரா வகை பல்வேறு big cup அளவுகளில் கிடைக்கின்றன. 'butterfly' தொகுப்பில் underwire மற்றும் non-under wire போன்ற தெரிவுகள் காணப்படுகின்றன.
'இரு பக்கமும் உள்ள லேஸ் தொடுகை, புலணுனர்வை தூண்டுவதாக அமைந்துள்ளது. 'butterfly' உள்ளாடையின் கவர்ச்சியை அதிகரிக்கும் வகையில் நடுவில் சிறிய bow வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையாக உணரவும், அழகாக தெரியும் வகையிலும் இந்த 'butterfly' தெரிவுகள் மூன்று அற்புதமான நிறங்களில் கிடைக்கிறது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நடைமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமையான வடிவமைப்புகளுடன், இலங்கைப் பெண்களின் உடலமைப்பிற்கு ஏற்ப பிரா வகைகளை வடிவமைக்கும் ஒரேயொரு வர்த்தகநாமம் டிரையம்ப் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் இப்போது இந்த வசீகரமான உள்ளாடைத் தெரிவுகளை அனுபவிக்க முடியும்.
