2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மைக்ரோமெக்ஸ் Canvas 4 ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேன்வாஸ் தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மைக்ரோமெக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் சிறந்த வன்பொருள் மற்றும் பல்வேறு மென்பொருள் அம்சங்களைக் கொண்ட Canvas 4 ஸ்மார்t ஃபோனின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளது.

மெல்லிய வடிவமைப்பு, அலுமினிய உடலமைப்பைக் கொண்ட Canvas 4 ஸ்மார்ட் ஃபோனானது நுகர்வோருக்கு பொருத்தமான ஸ்மார்ட் ஃபோன் வகையாக அமையும். image Sensor உடன்கூடிய 13MP கமராவிலுள்ள Face detection, துல்லித்தை அதிகரிப்பதற்கு Photosolid> Geo tagging> touch focus, Smile and Face detection> four direction panorama மற்றும் 1080p வீடியோ ரெக்கோடர் போன்றன அம்சங்கள் பயன்படுத்துனருக்கு மிகச்சிறந்த படப்பிடிப்பு அனுபவத்தை வழங்குகிறது. மேலும் 5MP முன்பக்க கமராவானது பயனருக்கு மேலதிக அனுகூலங்களையும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட் ஃபோனில் ஒரே சமயத்தில் பல வீடியோக்களை பார்வையிடும் வசதி, look away pause, video pinning வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள Pசழஒiஅவைல யளெறநச Proximity answer phone, Downside Silent, Upside speaker மற்றும் Proximity dial phone’ ஆகியன இலகுவான எந்தவித தொந்தரவு இல்லாத செயற்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இந்த வெளியீடு குறித்து மைக்ரோமெக்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உள்நாட்டு முகாமையாளர் சன்ஜீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், “Canvas 4இன் வெளியீட்டின் மூலம்  மீண்டுமொருமுறை செயற்திறன் மிக்க எமது புதிய கண்டுபிடிப்புகளை விஸ்தரித்துள்ளோம். சிறந்த தொழிற்பாடு மற்றும் ஸ்டைலை கொண்ட முழு eco-system appsகள் பாவனையாளர்களின் தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்கிறது.

இலங்கையின் ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் கேன்வாஸ் தொடர் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளதுடன், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோமெக்ஸ் பாவனையாளர்கள் ஒவ்வொருமுறையும் புதிதாக ஏதாவதொன்றை எதிர்பார்ப்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்யக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளினூடாக நுகர்வோரை ஆச்சரியப்படுத்தும் எமது வாக்குறுதியை தொடரவுள்ளோம்' என தெரிவித்தார்.

Canvas 4 வாங்குபவர்களின் பாதுகாப்பிற்கு, மைக்ரோமெக்ஸ் நிறுவனம் Back-Up, Anti-Theft Tracker, Anti-Virus போன்ற பாதுகாப்பு தீர்வுகளடங்கிய தனிப்பட்ட M! Security அம்சத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோனில் Cool themesகளை தரவிறக்கம் செய்துகொள்ள FoneClay, உடனடி Hike, Opera Mini, குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக திரைப்படங்களை கண்டுகளிக்க Spuul, M! Live மற்றும் mionline music tab’ இலட்சத்துக்கும் அதிகமான ஒன்லைன் பாடல்களை கேட்டு மகிழ Customized Music Hub, HD/premium games டவுண்லோட் செய்தல், அலுவலக வேலைகளுக்கு Kingsoft office suite போன்ற வேடிக்கை வினோதமான பல்வேறு அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

ரூ.42,990/=ரீ விற்பனையாகும் Canvas 4இனை, ஹுனுபிட்டிய மைக்ரோமெக்ஸ் காட்சியறை, மெஜெஸ்டிக் சிட்டி காட்சியறை, மெட்ரோபொலிடன் மற்றும் சீடில்ஸ் காட்சியறை மற்றும் நாடுபூராகவும் உள்ள விற்பனை முகவர்களிடம் கொள்வனவு செய்ய முடியும். மேலதிக விபரங்களுக்கு http://www.micromaxinfo.com/sl/ பிரவேசியுங்கள்.


மைக்ரோமெக்ஸ் பற்றி:
இந்தியாவின் பெரிய கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமாக திகழ்வதுடன், சர்வதேச ரீதியில் 11ஆவது மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. கடந்த ஒரு தசாப்தமாக, மைக்ரோமெக்ஸ் நிறுவனமானது புத்துருவாக்க சாதனங்களை வழங்கி, இந்தியாவின்; தொழில்நுட்ப ஜாம்பவானாக விளங்குகிறது.

மேலும் 2013 Q2  படி, 19.2 சந்தைப்பங்கினை தன்னகத்தே கொண்ட இந் நிறுவனம் இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமாக திகழ்கிறது. இந் நிறுவனம் அதன் வர்த்தகநாம உற்பத்தி வரிசையில் இரட்டை சிம் கைப்பேசிகள், 3G அண்ட்ரொயிட் ஸ்மார்ட் ஃபோன்கள், டெப்லட், LED தொலைக்காட்சிகள் மற்றும் தரவு அட்டைகள் போன்ற அம்சங்கள் நிறைந்த 60 இற்கும் மேற்பட்ட மாதிரிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் இந் நிறுவனத்தின் மூலம் 30 நாள் பற்றரி backup, இரட்டை சிம் கைபேசிகள், QWERTY keypads,  உலகளாவிய ரீமோர்ட் கன்ட்ரோல் கைபேசிகள் போன்றவற்றை முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிறுவனமானது ரஷ்யா மற்றும் SAARC சந்தைகளில் விற்பனை பிரசன்னத்தை கொண்டுள்ளது.

Key features of Canvas 4
  • Full aluminum mid housing
  • 5” 16:9 HD IPS full touch display
  • 1.2 GHz Quad Core processor
  • Android 4.2.1 (Jelly Bean)
  • 13MP rear camera; 5MP front camera
  • 2000 mAh battery
  • Dual SIM
  • 16GB NAND flash memory expandable up to 32GB
  • 1 GB RAM
  • Blow to unlock
  • Multi video viewing
  • Look away to pause video
  • Video/Browser pop out
  • 4 way panorama – Horizontal and Vertical
  • M!Security, Hike, Spuul, Opera Mini, MPower M! Zone+, M!live, Fone Clay installer, Kingsoft Office Suite, Game hub

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .