2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உலக Down Syndrome தினத்தினை நினைவுகூர்தல்

A.P.Mathan   / 2013 மார்ச் 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச Down Syndrome (DSI) அமைப்பானது மார்ச் மாதம் 24ஆம் திகதியை உலக Down Syndrome தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வமைப்பானது 2006ஆம் ஆண்டிலிருந்து Down Syndrome மற்றும் அதனுடன் தொடர்புடையவை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வினை முன்னெடுப்பதனை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. இலங்கையில் முதன் முதலில் உலக Down Syndrome தின கொண்டாட்டத்தினை 2007ஆம் ஆண்டு நடாத்திய கோசல துல்லேவ நிறுவனமானது (KDF), 2013ஆம் ஆண்டு ஞாபகார்த்த தினத்தினை மார்ச் மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை றோயல் கல்லூரி புதிய நாடக அரங்கத்தில்  (Royal College Nava Rangahala) நடாத்த திட்டமிட்டுள்ளது.

இவ்வருட நிகழ்வினை இணைந்து முன்னெடுப்பதற்கு இலங்கை Rotaract மாவட்டம் 3220 மற்றும் றோயல் கல்லூரியின் Interact சங்கம் என்பன KDF உடன் கைகோர்த்துள்ளன. இவ் ஒருநாள் நிகழ்வானது பின்வரும் நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

1. Classic Car Club of Ceylon இனால் முன்னெடுக்கப்படும் பண்டைய வாகனங்களின் ஊர்வலம். (நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து கொள்ளுப்பிட்டி வரைக்கும்)
2. Down Syndrome இனால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான மருத்துவ முகாம்.
3. உடல் மற்றும் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை வெளிக்கொணருமுகமான கலை நிகழ்வுகள்.
4. Down Syndromeஇனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சித்திரக் கண்காட்சி.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் Down Syndrome இனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இடவசதி காரணமாக முன்கூட்டியே பதிந்திருப்பின் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இலக்கங்களுள் ஒன்றினை தொடர்பு கொள்வதன் மூலம் பதிவினை மேற்கொள்ளலாம்.
0775850741 / 0773457260.
KDF 0112626526

மேலதிக தகவல்கள் பதிவின் போது தெரிவிக்கப்படும்.

சென்ற ஆண்டு நிகழ்வின் நிழற்படங்கள் சில...



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .