
துறைசார் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்களை வழிகாட்டுவது மற்றும் தொழில் நிலையத்தில் தமது செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ள ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளை SLIIT தாபிக்கப்பட்டது முதல் முன்னெடுத்து வருகிறது. நாட்டின் முன்னணி பட்டப்படிப்புகளை வழங்கும் கல்வியகமாக SLIIT திகழ்வதுடன், கல்வி மற்றும் தொழில்சார் வாய்ப்புகளை மாணவர்களுக்கு கணனி, வணிகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் வழங்கி வருகிறது.
SLIIT, ஸ்ரீலங்கா ரெலிகொம், LOLC, IFS, Aeturnum Lanka (Pvt) Ltd, Unilever, hSenid Business Solutions, Innodata Isogen, Mobitel, SLASSCOM, Zone 24x7, Virtusa, David Pieris Motor Company, Prima Ceylon, Reservations Gateway (Pvt.) Ltd மற்றும் ஒரேன்ஜ் தகவல் தொழில்நுட்பம் ஆகியன இணைந்து வெவ்வேறு துறைகளில் இயங்கும் SLIIT பட்டதாரிகளின் செயற்பாடுகளை கண்டறியும் வருடாந்த மனிதவள செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த துறைசார் பங்காளர்களுடன் கணினி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. மாலித விஜேசுந்தர, கலாநிதி. சர்வதேச பீடாதிபதி மஹேஷ கபுருபண்டார, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். அசோக் பீரிஸ், வணிக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. தீக்ஷன சுரவீர, பட்டப்படிப்புகள் மற்றும் ஆய்வுகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. கொலிய புலசிங்ஹ, பிரிவுகளின் தலைவர்கள், வணிக அபிவிருத்தி குழு மற்றும் SLIIT இன் தொழில்நிலை வழிகாட்டல் குழு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மாணவர்களின் வினைத்திறன் மற்றும் தொழில்தர்மம் பற்றி IFS R&D நிறுவனத்தின் மனிதவள மற்றும் செயற்பாடுகள் அபிவிருத்தி பணிப்பாளர் புபுது லியனகே கருத்து தெரிவிக்கையில், 'எம்மிடம் 100க்கும் அதிகமான SLIIT பட்டதாரிகள் பணியாற்றி வருகின்றனர். SLIIT உடன் இணைந்து நாம் விசேட புலமைப்பரிசில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். பகுதி நேரம் பட்டப்படிப்பையும், பகுதி நேரம் கற்கைகளையும் தொடர்வதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இன் SLIIT மாணவர்கள் விரைவாக விடயங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது' என்றார்.