2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

12ஆம் இடத்தில் இலங்கை

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலகளாவிய ரீதியில் BPO செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த நாடுகள் வரிசையில், இலங்கை 12ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. IBM நிறுவனத்தினால் இந்தத் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கையில் everjobs.lk இணையத்தளம் வெளியிட்டுள்ள வருடாந்த தொழில் ஆய்வு பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   

இலங்கையின் பணிக்கு ஆட்சேர்ப்பு துறையைப் பொறுத்தமட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணியில் திகழ்வதாகவும், பணி தேடுநர்களின் பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும், சுமார் 37,000 தொழில் வாய்ப்புகள், 200,000 தொழில் விண்ணப்பங்கள் மற்றும் 290,000 தொழில் தேடுநர்களின் தரவுகளின் பிரகாரம், இந்த ஆய்வை இணையத்தளம் மேற்கொண்டிருந்தது.   

இந்த நிலை தொடர்பில், everjobs ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷாப் சேத் கருத்துத் தெரிவிக்கையில், “IBM நிறுவனத்தின் உலகளாவிய ரீதியில், BPO செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை 12ஆவது இடத்தில் காணப்படுகிறது. Google, J.P. Morgan மற்றும் Microsoft போன்ற நிறுவனங்களின் BPO செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிஸ்டம் என்ஜினியரிங் போன்றவற்றில் காணப்படுகின்றன. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.இலகளாவிய ரீதியில் BPO செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த நாடுகள் வரிசையில், இலங்கை 12ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. IBM நிறுவனத்தினால் இந்தத் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கையில் everjobs.lk இணையத்தளம் வெளியிட்டுள்ள வருடாந்த தொழில் ஆய்வு பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   

இலங்கையின் பணிக்கு ஆட்சேர்ப்பு துறையைப் பொறுத்தமட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணியில் திகழ்வதாகவும், பணி தேடுநர்களின் பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும், சுமார் 37,000 தொழில் வாய்ப்புகள், 200,000 தொழில் விண்ணப்பங்கள் மற்றும் 290,000 தொழில் தேடுநர்களின் தரவுகளின் பிரகாரம், இந்த ஆய்வை இணையத்தளம் மேற்கொண்டிருந்தது.   

இந்த நிலை தொடர்பில், everjobs ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷாப் சேத் கருத்துத் தெரிவிக்கையில், “IBM நிறுவனத்தின் உலகளாவிய ரீதியில், BPO செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை 12ஆவது இடத்தில் காணப்படுகிறது. Google, J.P. Morgan மற்றும் Microsoft போன்ற நிறுவனங்களின் BPO செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிஸ்டம் என்ஜினியரிங் போன்றவற்றில் காணப்படுகின்றன. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X