Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் பாங்க் ஒஃப் கொழும்பு பிஎல்சி (வங்கி) [Union Bank of Colombo PLC (UBC)] மற்றும் அதன் துணை நிறுவனங்களான (குழுமம்) UB Finance Co. Ltd. kw;Wk; National Assets Management Ltd ஆகியன 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக (PAT) 197% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி வீதத்துடன் குறிப்பட்ட காலப்பகுதியில் ரூ. 275 மில்லியனைப் பெற்றுள்ளது.
குழுமத்தின் வருவாயானது, 23% வளர்ச்சியுடன் குறிப்பிட்ட காலப்பகுதியில் ரூ. 1,655 மில்லியனை ஈட்டியது. குழுமத்தின் மொத்த சொத்து 16% year-to-date (YTD) வளர்ச்சியுடன் ரூ. 88,946 மில்லியனாக விளங்குகின்றது.வங்கியின் குறித்த காலப்பகுதிக்கான வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 154 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், 156% வருடாவருட (YoY) அதிகரிப்பினைப் பெற்றுள்ளது. நிலையான முன்னேற்றத்தை காண்பித்தவாறு, வங்கியின் மொத்த செயற்பாட்டு வருமானம், 23% வருடா வருட (YoY) அதிகரிப்பினைப் பெற்று ரூ. 1665 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வர்த்தக கடன்கள், அட்டைகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் முதன்மை பங்களிப்பாளர்களாக விளங்க, குறிப்பிட்ட காலப்பகுதியில் வங்கியின் நிகர கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121% அதிகரிப்புடன் ரூ. 121 மில்லியன் மேம்பாட்டினை வெளிப்படுத்தியது. முதலீடுகள் மீதான நிகர ஈட்டல்கள் 251% YoY வளர்ச்சியுடன், ரூ. 278 மில்லியன்களை பதிவு செய்தது. வங்கியானது, பங்கிலாப சந்தையில் எந்தவித வெளிப்படுத்தல்களையும் கொண்டிருக்கவில்லை.
சேவைத்தொகுப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பிரதிபலித்தமை காரணமாக, நிகர NPL விகிதமானது, 2.0% இல் இருந்து 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.7% ஆக உயர்ந்தது. குறித்தக் காலகட்டத்திற்கான தேய்மானக் கட்டணங்கள் முன்னைய காலப்பகுதியில் காணப்பட்ட 83% உடன் ஒப்பிடுகையில் குறைவுடன் ரூ.18 மில்லியனாக விளங்குகின்றது வங்கியின் மொத்த நடவடிக்கை செலவீனங்கள், வங்கியினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் வினைத்திறன் திட்டத்துக்கு அமைவாக, பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடுகள் காரணமாக 29% உடன் ரூ. 1433 மில்லியனாக அதிகரித்தது.
வங்கியானது முதலீட்டு போதுமை மீது 23.2% என்ற வலுவான மையத்தினைக் கொண்டுள்ளதுடன், மொத்த முதலீட்டு போதுமை விகிதமாக 22.8% இனைக் கொண்டுள்ளது.வங்கியின் ஐந்தொகை 15.9% YTD உடன் விசாலமாகியவாறு ரூ. 82,302 மில்லியன்களை எட்டியது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் 21% உடன் ரூ. 48,513 மில்லியனாக குறித்த காலப்பகுதியில் அதிகரிக்க, வாடிக்கையாளர் வைப்புகள் 21.6% வளர்ச்சியுடன் ரூ.45,803 மில்லியனை வெளிப்படுத்தியது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago