Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸுடன் (LHD) கைகோர்த்துள்ளமை குறித்து றோயல் ஹொஸ்பிட்டல்ஸ் அண்மையில் அறிவித்திருந்தது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பிஎல்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் (LHD) விசேட ஆய்வுகூட வதிகளை வழங்குவதிலும் ஆய்வுகூட அறிக்கைகளில் நம்பகமான தகவல்களை வழங்குவதிலும் இலங்கை மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆய்வுகூட பரிசோதனைகளில் வளர்ந்து வரும் பல்வகைமை மற்றும் சிக்கல் தன்மை காரணமாக, விசுவாசமிக்க சேவை வழங்குநருக்கான தேவையை றோயல் ஹோஸ்பிட்டல்ஸ் நிறுவனம் நன்குணர்ந்து கொண்டது.இதன் காரணமாகவே இலங்கையின் முதலாவது மருத்துவ மேற்கோள் ஆய்வுகூடமாகவும் இந்த நாட்டின் மிகப்பெரிய பரிசோதனை தொகுப்பையும் கொண்டுள்ள இரசாயன ஆய்வுகூடமாக விளங்கும் (LHD)உடன் கைகோர்க்க றோயல் ஹொஸ்பிட்டல்ஸ் தீர்மானித்தது.
'றோயல் ஹொஸ்பிட்டல் அதன் ஆய்வுகூட சேவைகளுக்காக எம்மோடு கைகோர்த்துள்ளமையை நாம் மிக முக்கிய மைல்கல்லாக கருதுகிறோம். நம்பகத்தன்மை, விரைவு மற்றும் தரம் ஆகியவற்றுடன் இந்நாட்டு மக்களுக்கு உயர்தரமான சேவைகளை நாம் வழங்கி வருகிறோம்' என லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸின் தலைவர் டொக்டர் சரத் பரணவிதான தெரிவித்தார்.
இந்த கைகோர்ப்பு பற்றி கொழும்பு றோயல் ஹொஸ்பிட்டலின் முகாமைத்துவ பணிப்பாளர் தினேஷ் ரணவீர குறிப்பிடுகையில், தாம் கடந்த 15 வருடங்களாக ஆய்வுகூட சேவைகளை வழங்கி வருவதுடன், நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் நோக்கில் நாட்டின் முன்னணி ஆய்வுகூட சேவை வழங்குநருடன் கைகோர்க்க எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, '(LHD) என்பது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்தி தரம் வாய்ந்த மருத்துவ ஆய்வுகூட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது' எனவும் குறிப்பிட்டார்.
(LHD) மூலமாக வழங்கப்படும் 1,050இற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மற்றும் 84இற்கும் மேற்பட்ட விசேட பரிசோதனைகளை தற்போது றோயல் ஹொஸ்பிட்டல் நோயாளிகளும்; முன்னெடுக்க முடிவதுடன், றோயல் மருத்துவமனையில் அல்லது கொழும்பு நகருக்கு அருகாமையில் காணப்படும் 30இற்கும் மேற்பட்ட (LHD) மாதிரி சேகரிப்பு மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். றோயல் ஹொஸ்பிட்டல் நோயாளர்களின் கைபேசிகளுக்கு மருத்துவ அறிக்கை தயார் போன்ற குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுவதுடன், (LHD) வலைத்தளத்தில் தமது அறிக்கைகளை ஒன்லைனில் பார்வையிடக்கூடிய பாதுகாப்பான வசதிகள் உள்ளமையும் விசேட அம்சமாகும்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago