Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 06 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜனனி ஞானசேகரன்
HSBC கொழும்பு ஃபஷன் வீக் (HSBC Colombo Fashion Week) ஆனது, 14ஆவது வருட பூர்த்தியினை காண்கின்றது. ஃபஷன் தொழிற்றுறையின் இலக்கினை மேம்படுத்தும் வகையில், உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலுள்ள ஃபஷன் நுகர்வோருக்கும் ஏற்றவகையில், இலங்கையின் ஃபஷன் வடிவமைப்பு தொழிற்றுறையினை மேம்படுத்துவதற்கும், காட்சிப்படுத்துவதற்குமான பன்முக முனைப்புகளை மேற்கொள்கின்றது.
கடந்த ஒரு தசாப்தகாலமாக, CFW முகாமைசெய்து வெற்றிகரமாக வெளிப்படுத்திய விடயங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது. அங்குரார்ப்பணம் செய்த நாள் முதல், உள்நாட்டு ஃபஷன் தொழிற்றுறைக்கு அத்தியாவசியமான உத்வேகத்தினை, ஃபஷன் கல்வி, ஃபஷன் சில்லறை வர்த்தகம், வடிவமைப்பாளர் மேம்படுத்தல், சர்வதேச ரீதியில் வடிவமைப்பாளர்கள் தமது வடிவமைப்புகளுக்கான காட்சிப்படுத்தல் தளங்களை உருவாக்கி அளித்தலுக்கான வாய்ப்புகளை மேற்கொள்ளல் போன்றவற்றை CFW தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
கடந்த சில வருடங்களாக இந்நிகழ்ச்சிக்கான களத்தினை அளித்துவரும் கொழும்பு ஹில்டன் ஹொட்டலின் பொது முகாமையாளர் மனேஷ் பெர்ணாண்டோ இது குறித்து தெரிவிக்கையில் “இருதரப்பினருக்கும் ஏராளமான அனுகூலங்களை இந்த பங்குடமை அளித்து வந்துள்ளது. இந்த நிகழ்வின் ஊடாக இலங்கையானது வெறுமனே சூரியன், கடல், கலாசாரம் மற்றும் சாகச பொழுதுபோக்குகளுக்காக மட்டுமன்றி, ஃபஷன் மையம் என்ற வகையிலும் நிச்சயமாக விஜயம் செய்யப்பட வேண்டிய இடம் என்ற பெயரை உலக வரைபடத்தில் பெற்றுள்ளது. கொழும்பு ஹில்டன் இளைஞர்களின் மேம்பாடு குறித்து அர்ப்பணிப்புணர்வுடன் செயற்படுகின்றது. CFW போன்ற நிகழ்வுகள் வளர்ந்துவரும் டிசைனர்களுக்கு வேண்டிய வாய்ப்பினை அளிக்கின்றது என்பதை நாம் முழுமனதுடன் வலிறுத்தி தெரிவிக்கின்றோம்” என்றார்.
CFW வாரமானது, மார்ச் 13ஆம் திகதி ஆரம்பித்து 18ஆம் திகதி வரை இடம்பெறும். குறித்த வாரத்தில் கலை, திரைப்படங்கள், உணவு, அறிவாற்றல் பயிற்சிப்பட்டறைகள், டிசைனர் பொப்- அப் நிகழ்வுகள், நெறிமுறைசார் ஃபஷன் மற்றும் வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள் தமது படைப்புகளைக் காட்சிப்படுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
21 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
29 minute ago