2026 மே 07, வியாழக்கிழமை

இலங்கை அணியின் ஆடை வழங்குநர் ஹமீடியா

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமீடியா ஸ்ரீ லங்கா நிறுவனம், றியோ டீ ஜனீரியோ நகரில் நடைபெறும் 2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை வழங்குநராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  

'இலங்கை ஒலிம்பிக் அணியின் உத்தியோகயூர்வ ஆடைசார் அனுசரணையாளராக திகழ்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்' என்று ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார். 'இந்த அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் இலங்கையின் வர்த்தக குறியீட்டு தூதுவர்களாவர். அவர்கள் தனிப்பட்ட மெய்வல்லுனர்களாகவும் ஒரு அணி என்ற அடிப்படையிலும் தம்முடைய தாய்நாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கண்டுகளிக்கப்படும் கண்ணைக்கவரும் ஆரம்ப நிகழ்வின் போது விளையாட்டரங்கில் எமது இலங்கை அணியினர் அணிவகுத்துச் செல்கையில், அவர்கள் ஆழமானதொரு பெருமித உணர்வை உணர்வது எமக்கு அவசியமாக இருக்கின்றது. அதுபோலவே, அவர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நாம் பெருமிதம் கொள்கின்றோம் என்பதையும் நாம் அறிவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'எமது உத்தியோகபூர்வ ஆடை வழங்குனராக ஹமீடியா நிறுவனத்தை இணைத்துக் கொள்வதையிட்டு நாம் மிக மகிழ்ச்சி அடைகின்றோம். இதுபோன்ற நிகழ்வுகளுடன் அவர்கள் எவ்வாறு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்பதை நாம் கண்டுகொண்டுள்ளோம்.

இந்தப் பணியின் நோக்கெல்லையை பௌசுல் ஹமீட் புரிந்து கொண்டுள்ளதுடன், ஒரு அணிக்கு எவ்வாறு ஆடை அணிவித்து அழகுபடுத்துவது என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றார்' என்று இலங்கை ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகமான மெக்ஸ்வல் டீ சில்வா கூறினார். 'ஹமீடியா நிறுவனத்துடனான எமது பங்காளித்துவமானது நீண்டகால அடிப்படையிலானதாக அமைந்திருக்கும். அடுத்த மூன்று தொடக்கம் நான்கு வருடங்கள் வரை அவர்களோடு நெருக்கமாக இணைந்து செயற்பட நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .