2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிரிபத்கொடையில் பேகர் கிங் உணவகம்

Gavitha   / 2017 மார்ச் 28 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொடையில் பேகர் கிங் உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முக்கியமானதோர் புறநகர் பகுதியில், 14ஆவது கிளையாக அது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களான சொஃப்ட்லொஜிக் ரெஸ்டோரன்ஸ் நிறுவனம் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும். 

புதிய பேகர் கிங் கிளை இலக்கம் 145, தளுகம, களனி என்ற முகவரியில் அமைந்துள்ளது. ஒரு சிறந்த உணவகத்தை எதிர்பார்த்திருந்த கிரிபத்கொடை மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் ஆவல் இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அற்புதமான சூழல், சிநேகபூர்வமான ஊழியர்கள், போதிய வாகன தரிப்பிட வசதி, சுவையான உணவு வகைகள் என எல்லா தேவைகளும் இங்கு பூர்த்தியாகியுள்ளன. புதிய கண்டி வீதி பழைய கண்டி வீதி ஆகிய இரு வழிகளாலும் இங்கு பிரவேசிக்கலாம். இந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் இந்தப் பகுதியைக் கடந்து செல்பவர்கள் ஆகியோரின் நன்மை கருதி இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. கிழமை நாற்களில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையும் வார இறுதி நாற்களில் காலை ஏழு மணி முதல் நள்ளிரவு வரையிலும் இந்த உணவகம் திறந்திருக்கும்.  

“Home of the Whopper” என தங்களை அழைத்துக் கொள்ளும் துரித உணவு ஜாம்பவான்கள் பிரத்தியேகமான சுத்தம் செழுமை என்பனவற்றுக்கு பெயர் போனவர்களாவர். பர்கர் வகை உணவுகளை விரும்புகின்றவர்களுக்கு இதை விட சுத்தமான ஆரோக்கியமான ஒரு உணவகம் இருக்க முடியாது. இங்கு வருகை தருபவர்கள் உலகத் தரம் வாய்ந்த வித்தியாசமானதோர் உணவுப் பட்டியலில் இருந்து தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். நூறு வீதம் மாட்டிறைச்சி அல்லது கோழியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஏனைய சுவையூட்டிகள் மற்றும் உணவுச் சேர்க்கைகளுடன் கூடிய பெரிய அளவிலான பனிஸ் வகை உணவுகள் இங்கு பிரத்தியேகமானவை. காலை உணவின் போது கொடுக்கப்படும் பணத்துக்கு நிகரான சத்துணவு பெறுமானத்தையும் பேகர்  கிங் வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X