2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கூல் பிளானட்'Sky High’ அட்டை அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூல் பிளானட் (Cool Planet) நிறுவனத்தின் விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான வரப்பிரசாதங்களைப் பெறக்கூடிய வாய்ப்பும், அதேபோன்று கூல் பிளானட் முதன்மை விசுவாச அட்டையான “Sky High”ஊடாக மேலதிக அனுகூலங்களைப் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

தொடர்ச்சியாக தனது வலையமைப்பை விஸ்தரித்துச் செல்கின்ற கூல் பிளானட் நிறுவனம், மிகச் சிறந்த நவநாகரிக உற்பத்திகளையும் வாடிக்கையாளர் கொடுக்கின்ற பணத்துக்கு சிறப்பான பெறுமதியையும் வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த விசுவாசம் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியமைக்காக, அவர்களுக்கு இந்த விசுவாச அட்டையின் ஊடாக வெகுமதிகளை வழங்கியுள்ளது.  

இலங்கையில் உயர்தரமான சேர்ட்களை உற்பத்தி செய்வதில் பல்லாண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள அதேநேரம், சிறந்த தரத்திலான சேர்ட்களை உற்பத்தி செய்வதிலும், புகழ்பெற்றுத் திகழும் Emerald International (Pvt) Ltd. நிறுவனமானது, பிரமாண்டமாக இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் பங்காளியாக செயற்பட்டது. இந்நிகழ்வில் எமரல்ட் பிரத்தியேக வர்த்தகக் குறியீட்டு தூதுவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.  

கிரிக்கெட் விளையாட்டு உலகில் புகழ்பெற்ற இரட்டை நட்சத்திரங்களான இவ்விருவருக்கும் முதலிரண்டு முதன்மை விசுவாச (பிரீமியர் லோயல்ட்டி) அட்டைகள் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்த பல நட்சத்திரங்கள் மற்றும் வியாபார துறைசார் ஜாம்பவான்களுக்கும் இவ் அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்த விசுவாச அட்டை, விசுவாசமுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தற்போது பொதுவானதொரு அட்டையாகவே காணப்படும். ஒரு வருட காலதுக்குப் பின்னர் வாடிக்கையாளர்கள் வேறுபட்ட மட்டங்களுக்கு இந்த அட்டையை மேம்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு “புள்ளியை” பெற்றுக் கொள்ளலாம். ஒரு விசுவாசப் புள்ளியானது ஒரு ரூபாய்க்கு சமமானதாக காணப்படும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X