2025 ஜூலை 30, புதன்கிழமை

கட்டடப்பொறியியலாளர்களுக்கான சங்கத்தின் வருடாந்த செயலமர்வு நிறைவு

Gavitha   / 2016 நவம்பர் 02 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கட்டடப்பொறியியலாளர்களுக்கான சங்கத்தின், 2016இன் வருடாந்த செயலமர்வுகள் அண்மையில் கொழும்பில்  நடைபெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், நிர்மாணத்துறையைச் சேர்ந்த 200க்கும் அதிகமான பொறியியலாளர்கள், ஆலோசகர்கள், நிர்மாணத்துறை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். 

கட்டடப்பொறியியலாளர்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், இந்த வருடாந்த செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  

ஜப்பானின் உபே இன்டஸ்ரீஸ் லிமிட்டெட்டின் புகழ்பெற்ற கட்டடப்பொறியியலாளரான கலாநிதி. டகனொரி கவமொடோ பிரதான உரையை ஆற்றியிருந்தார். இவர் ஜப்பானில் நிர்மாணிக்கப்படும் புத்தாக்கமான கட்டடங்களின் மதிப்பீடுகள் தொடர்பான முக்கியத்துவம் குறித்த விளக்கங்களை வழங்கியிருந்தார். மேலும், இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசிரியர் சுதிர் மிஸ்ரா, இரண்டாவது பிரதான கருத்துரையை ஆற்றியிருந்தார். கொங்கிறீற் கட்டமைப்புகளை அலங்கரிப்பதன் மூலமாக நீடித்த பாவனை பற்றியும், அதை முன்னெடுக்க காணப்படும் சவால்கள் பற்றியும் விளக்கங்களை வழங்கியிருந்தார்.  

இலங்கையின் கட்டடப்பொறியியல் துறையின் முன்னணி நிபுணர்களினால் ஒன்பது பிரதான ஆவணங்கள், இந்த மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்தக் கொள்கை ஆவணங்களை, துறையின் முன்னணி நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் மீளாய்வு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .