2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சாதனையாளர்களுக்கு சியெட் ஊக்கமளிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமய மலை சாதனையாளர்களுக்கு சியெட் ஊக்கமளிப்பு  ஆற்றல், உற்சாகம் மனோதிடம், பொறுமை இவை அனைத்தும் ஒன்றிணைந்து இரு இலங்கையர்களை உலகின் மிகவும் உயரமான இமய மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களான சியெட் களனி ஹோல்டிங்ஸ் தனது ஊழியர்களுக்கு இதிலிருந்து சிறந்த முன் அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த சாதனையாளர்களுடன் உற்சாக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.   
இமயமலை சிகரத்தை அடைந்த சாதனையாளர்களான ஜயந்தி குரு உதும்பலா மற்றும் யோலுன் பீரிஸ் ஆகியோருடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. களனியில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சகல நிலைகளையும் சேர்ந்த ஊழியர்களும் சியெட் முகாமைத்துவக் குழுவோடு இணைந்து பங்கேற்றனர்.   

‘எமது ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், உற்சாகமூட்டல், எழுச்சியூட்டல் என்பனவற்றை வழங்கி அவர்களை தொடர்ச்சியாக முன்னேற்றுவது எமது வெற்றியின் முன்னணி காரணிகளுள் ஒன்றாகத் திகழுகின்றது.

இந்த அதிசயிக்கத்தக்க இலங்கையர்கள் இருவரினதும் வியக்கத்தக்க ஆற்றல் வெற்றித் திட்டத்துக்கு தேவையான ஆழமான உள்ளார்ந்த காரணியை வழங்குகின்றது’ என்று சியெட் களனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் கம்பீர் கூறினார். இமயமலை சாதனையாளர்களுடனான சந்திப்பில் பங்கேற்ற சியெட் அணியின் ஒரு பிரிவினரை படத்தில் காணலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X