2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

45 செயற்றிட்ட பூர்த்தியைக் கொண்டாடுகின்றதுஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பாற்பண்ணை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமான Grass Roots நிதியத்துக்கமைய, பெருமளவான நிலைபேறானப் பாற்பண்ணை சமூகங்களைக் கட்டியெழுப்ப முன்வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் சமூக செயற்றிட்டங்களுக்காக 33 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது.

இலங்கையில், பாற்பண்ணை கூட்டாண்மை நிறுவனத்தின் மூலமாக 10 மில்லியன் லீற்றர் பால் உள்நாட்டுப் பாற்பண்ணையாளர்களிடமிருந்து அங்கர் மற்றும் அங்கர் நியுடேல் ருர்வு பால், யோகட் மற்றும் தயிர் உற்பத்திக்காகப் பெறப்படுகிறது.

இந்தப் பாற் சமூகங்களில் இதற்காக ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா, நீர், சுகாதாரம், சமூக உட்கட்டமைப்பு மற்றும் ஈடுபாட்டு செயற்றிட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக 30,000 க்கும் அதிகமான சிறுவர்கள், ஆசிரியர்கள், பாற்பண்ணை சமூகங்கள் மற்றும் சமூக அங்கத்தவர்கள் ஆகியோர் இரு வருடங்களில் நேர்த்தியானப் பயனைப் பெற்றுள்ளனர்.   ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத்தெரிவிக்கையில், சுபீட்சமானதும் மகிழ்ச்சிகரமானதுமான பாற்பண்ணை சமூகங்களை உருவாக்குவதில் ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்த இலக்கை எய்துவதற்கு, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது என்பது முக்கியப் பங்களிப்பை வழங்கியிருந்தது.“எமது Grass Roots நிதியத்தின் மூலமாக இந்தப் பாற்பண்ணை சமூகங்களில் நேர்த்தியானத் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இரண்டு வருடங்களில் 30,000 க்கும் அதிகமான மக்களை எம்மால் சென்றடையக்கூடியதாக இருந்தது. எமது சமூகங்களில் நாம் மேற்கொள்ளும் நேர்த்தியான மாற்றங்களுக்கு இது மற்றுமொரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .