Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலையான உணவு உற்பத்தி மற்றும் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து பயன்கள் தொடர்பில் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையினால் 2016ஆம் ஆண்டை சர்வதேச பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவித்துள்ளது. 'ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு ஊட்டமிகு விதைகள்' என்ற தொனிப்பொருளே இதன் நோக்கமாகும். பருப்பு வகைகள் உட்கொள்வதன் பயனாக நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் உடற்பருமன் ஆகிய குறைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம். அதிகளவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வது நிலையான உணவு உற்பத்திக்கு வழிவகுப்பதுடன், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பருப்பு வகைகளை வர்த்தகம் செய்பவர்கள் சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்ப்பளித்து மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்காக அனுசரணை வழங்குவதுமே சர்வதேச பருப்பு வகைகளின் ஆண்டாக பிரகடனப்படுத்தியதின் நோக்கமாகும
பருப்பு வகைகள் எவை?
பருப்பு வகைத் தாவரங்களிலிருந்து பெறப்படும் உலர் விதைகளே உணவாகப் பயன்படுத்தப்படும். துவரம் பருப்பு, வட்டானா பருப்பு, கொண்டைக் கடலை, பயறு, தட்டைப் பயறு ஆகிய பருப்பு வகைகள் இலங்கையில் அதிக அளவில் நுகரப்படுகின்றன.
பருப்பு வகைகளிலுள்ள சுகாதார பயன்கள்
பருப்பு வகைகள் தாவரப் புரதம், நார்ச் சத்து, விற்றமின்கள் மற்றும் கனிம சத்துகள் செறிந்தவை. பருப்பு வகைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செறிமானக் கோளாறுகளான மலச் சிக்கல் மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவும். பருப்பு வகைகளில் உள்ள அதிகளவு புரதச் சத்து காரணமாக அவை சைவ உணவு பிரியர்களுக்கு மிகச் சிறந்த புரத மூலாதாரமாகும். பருப்பு வகைகளில் கொழுப்பு சக்தி குறைவாகவுள்ளதுடன் இரத்தக்கொழுப்பை குறைப்பதுடன் உடல் பருமனடைவதைத் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளமை விசேடம்சமாகும். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த உதவுவதுடன் நீடித்த இளமைப் பருவத்தை அனுபவிக்கலாம். அசைவ உணவு உண்பவர்களைக் காட்டிலும் பருப்பு வகைகள் உண்பவர்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் கொண்டவராக வாழலாம்.
போஷாக்கு மிகுந்த மற்றும் இரசாயன பதார்த்தங்களற்ற உணவு உட்கொள்வதில் உள்ள பயன்கள் தொடர்பாக இன்றைய தலைமுறை குறைந்த கவனம் செலுத்துவதைக் காணலாம். எனவே, அவர்கள் அடிக்கடி பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். சீரான உணவு பழக்கவழக்கங்கள் சுறுசுறுப்பான மற்றும் நோயற்ற வாழ்வின் அடிப்படையாகும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுக்க இயன்ற அளவில் உணவில் பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.
மாமிசப் புரதம்
தாவரப் புரதங்களைக் காட்டிலும் மாமிசப் புரதங்கள் மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்குமென்பது ஆராய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பருப்பு வகைகள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்று நோய், சிறுநீரகக் கோளாறுகள், உயர் குருதி அழுத்தம் மற்றும் உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டுப்படுத்த உதவும். தாவரப் புரதங்களில் காணப்படாத மாமிச உணவுகளில் மட்டுமே உள்ள புரதக் கொழுப்பு இருதய நோயை உண்டு பண்ணும்.
உடல் வளர்ச்சிக்கு புரதம் மிகத் தேவையான போஷாக்காக இருந்தாலும் மாமிச புரதம் காரணமாக சிறு பிள்ளைகள் விரைவில் பருவத்தை எய்துவது எதிர்மறை பண்பாகும். மாமிச உணவுகள் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக இருப்பதினால் உடலில் பல அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
உணவு உற்பத்தில் பருப்பு வகைகளின் பங்களிப்பு
பருப்பு வகைகள் களஞ்சியப்படுத்துவதில் அவற்றின் ஊட்டச்சத்துகள் குன்றாது. பருப்பு வகைகள் விரைவில் கெட்டுப்போகாமையால் நீண்ட காலம் சேமித்து வைக்கலாம். ஒரு அறுவடையிலிருந்து மற்றுமொரு அறுவடை காலம் வரை உணவு குறைபாடு ஏற்படாது. இது உடல் உறுதிக்கு வழிவகுக்கும். மேலும், ஏனைய பயிர்கள் விளையாத வரண்ட நிலங்களில் சில பருப்பு வகைகள் விளையும். இது அவ்வாறான பிரதேசங்களில் உணவு உற்பத்திக்கும் உதவும்.
நிலைபேறான சூழல் பேணலுக்காக பருப்பு வகைகளை உற்பத்தி செய்தல்
இன்று உலகில் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றங்கள் மற்றும் உயிரியல் பல்வகைமை குறைவடைவது முக்கிய சூழல் பிரச்சினைகள் ஆகும். பருப்பு வகைகளை பாரிய அளவில் உற்பத்தி செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் சாதகமான விளைவுகள் பற்றிய மேலும் ஆராய்வுகளை மேற்கொள்ள அனுசரணை வழங்குவதும் சர்வதேச பருப்பு வகைகள் வருடத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கமாகும். மேலும், பருப்பு வகைகளை பாரிய நிலப்பரப்புகளில் உற்பத்தி செய்வதன் மூலம் நிலைபேறான விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம்.
பயற்றினஞ் சார்ந்த தாவரங்களில் உள்ள நைதரசன் நிலைப்படுத்தல் மற்றும் பொஸ்பரஸ் விடுவித்தல் ஆகிய குணங்களால் மண்ணின் தரம் இயற்கையாகவே மேம்படும். பயிர் சுழற்சிக்காக பயற்றினஞ் சார்ந்த பயிர்கள் உபயோகிப்பதன் மூலம் பீடைகளை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம். பயற்றினஞ் சார்ந்த பயிர் வகைகளான பருப்பு வகைகளை பயிர் செய்வதில் இரசாயன பீடை நாசினிகள் அல்லது உர வகைகள் பயன்படாமையால் சூழல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பருப்பு வகைகள் பாரிய பங்கு வகிக்கின்றது.
சந்தையில் பருப்பு வகைகளுக்கான தற்போதைய நிலை
கனடா மற்றும் அவுஸ்திரேலியா பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்வதில் சந்தையில் முன்னோடிகளாக திகழ்கின்றன. சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டு பிரகடனப்படுத்தப்படுவதையடுத்து வருடம் முழுவதும் சர்வதேச அளவில் மேற்கொள்ளவிருக்கின்ற விழிப்புணர்வு நிகழ்வுகளின் ஊடாக பருப்பு வகைகள் நுகர்வில் ஏற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது சர்வதேச பருப்பு வகைகள் சந்தைக்கு சாதகமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago