2025 ஜூலை 30, புதன்கிழமை

தகவல் தொடர்பாடல் மையத்தை அமைப்பது தொடர்பாக ஆய்வு

Gavitha   / 2016 நவம்பர் 02 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இரண்டாம் நிலை கல்விக்காக தகவல் தொடர்பாடல் மையமொன்றை நிறுவுவதற்கான முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளத் தென்கொரியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி முன்வந்துள்ளது. இதற்காக, இணை ஆலோசனை நிறுவனமொன்றுடன் கைகோர்க்கவுள்ளது. 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு, ஆளுமை படைத்த ஊழியர்கள் குழாமை கொண்டிருப்பது என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளதென இலங்கை இனங்கண்டிருந்தது. 

இந்த இனங்காணல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, தற்போது நாட்டில் காணப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலை தொடர்பில் ஆய்வு ​செய்வதற்கு, KSP-ADB இணை ஆலோசனைக்குழு முன்வந்துள்ளதுடன், இதற்கானத் திட்டத்தை வகுக்கவுள்ளது. 

இந்த ஆய்வை முன்னெடுப்பதற்கு மேலாக, இலங்கையின் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு திறன் கட்டியெழுப்பல் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளது. தரம் 6 முதல் க.பொ.த உயர் தரம் வரை காணப்படும் கல்வி முறையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய கல்வி உள்ளடக்கங்கள், கல்வி தகவல் தரங்கள், திறன் விருத்திச் செயற்பாடுகள் மற்றும் முறைகள் போன்றவற்றை சேர்ப்பதற்கான தேவை அதிகரித்துக்காணப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .