2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

2015 நிதிப் பெறுபேறுகளில் Fairfax சிறப்பு பதிவு

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 30 வருட வரலாற்றில் மிகவும் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக Fairfax அறிவித்துள்ளது. 2014இல் பதிவாகிய காப்புறுதி இலாபப் பெறுமதியான 552 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2015இல் 705 மில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவுசெய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் 568 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்தது. இதன் மூலம் பொதுப் பங்காளர்களின் உரிமம் 2014 டிசெம்பர் 31ஆம் திகதி பதிவாகியிருந்த 8.4 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கடந்த ஆண்டில் 9.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது

யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் லிமிட்டெட் நிறுவனத்தின் 78 சதவீதமான உரிமையாண்மையை Fairfax நிறுவனம் கொண்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பொதுக் காப்புறுதி சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.

பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் என்பதுடன், டொரான்டோ நகரை மையமாகக் கொண்டு இயங்கி வருவதுடன், டொரான்டோ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காப்புறுதி, மீள-காப்புறுதி மற்றும் நிதிச்சேவைகளை வழங்குவதில் உலகளாவிய ரீதியில் வழங்குவதில் பல ஆண்டு கால முன் அனுபவத்தை Fairfax கொண்டுள்ளது. 2015 ஜனவரி மாதம் முதல் யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை Fairfax கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X