Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
CEAT Kelani Holdings Pvt ltd தயாரிக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான டயர் வகைகளில் மேலும் நான்கு புதிய அளவுகளை உள்ளடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.இவற்றில் ஒன்று ‘superbike" வகையில் 2 மாதிரிகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆபத்தான நிலைமைகளிலும் உயர் செயற்பாட்டுடன் இயங்கத் தக்கதாக மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டயர்கள் உள்ளூர் வீதிகளின் மேற்பரப்புககளுக்கு பொருத்தமான அம்சங்களைக் கொண்டுள்ளன என்று கம்பனி தெரிவித்துள்ளது.
நான்கு புதிய அளவுகளில் 140/70/-17 Zoom XL (டியூப் இல்லாதது) டயர் Yamaha FZ, Honda CBR 250 மோட்டார் சைக்கிள்களுக்கும், Secura Pulse (டியூப் இல்லாதது) Bajaj Pulsar மோட்டார் சைக்கிள்களுக்கும் பொருத்தiமானவையாகும். ஏனைய இரு புதிய அளவுகளிலான டயர்களும் TVS Streak, Yamaha Jog 50, 90/100-10 Zoom D (டியூப் இல்லாதது) Hero Pleasure, Yamaha Ray ஆகிய மாதிரிளுக்கு ஏற்றவை.
இந்த டயர்கள் லாவகமாக உருண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்காக மேற்பரப்பில் தனித்துவமானப் புதிய தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீரை முற்றாக கற்றுவதற்காக மேற்பரப்பில் ஆழ் தடங்கள் வெட்டப்பட்டுள்ளன. வரண்ட அல்லது ஈரலிப்பான மேற்பரப்பில் பற்றிப் பிடிக்கும் வகையில் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிவேகத்தில் செல்லும் போதும் திடீரென பிறேக் ஐ பயன்படுத்தும் போதும் வழமையான இடர்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதியதொரு உருவமைப்பு டயர்களுக் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கின்றன.
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago