Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 20 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
Siam City சீமெந்து நிறுவனத்தின் (முன்னர் ஹொல்சிம் என அழைக்கப்பட்டது) புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நந்தன ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இவர் Siam City சீமெந்து (வியட்நாம்) நிறுவனத்தின் பன்முகப்படுத்தல் செய்ற்றிட்டத்தின் நிதிப் பணிப்பாளராக செயலாற்றியிருந்தார். இதுவரை காலமும் இந்த பதவியை வகித்த பிலிப்பே ரிச்சார்ட் இடமிருந்து இந்த பொறுப்புகளை நந்தன ஏற்கவுள்ளார். பிலிப்பே ரிச்சார்ட் வியட்நாம் செயற்பாடுகளுக்கான பொது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹொல்சிம் வியட்நாம் செயற்பாடுகளின் நிதி பணிப்பாளராக 2007 ஜுன் மாதம் முதல் நந்தன செயலாற்றி வந்தார். வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பதவியை இவர் வகித்திருந்தார்.
அதற்கு முன்பு ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் நிதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கான உதவி தலைவராக பணியாற்றியிருந்தார். ஹொல்சிம் லங்கா நிறுவனத்தில் மட்டுமின்றி, ரூஹுணு சீமெந்து மற்றும் ஹேலீஸ் லிமிட்டெட் ஆகியவற்றில் இவர் சிரேஷ்ட முகாமைத்துவ நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago