2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

10 வருட பூர்த்தியில் SLT-MOBITEL mCash

Freelancer   / 2023 டிசெம்பர் 15 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தேசிய மொபைல் பணச் சேவை வழங்குநரான mCash, இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவு முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், பணப்புழக்கமில்லாத எதிர்காலத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது. இந்த ஆண்டு, SLT-MOBITEL இன் முன்னணி மொபைல் நிதிச் சேவைகள் கட்டமைப்பான mCash, தனது 10 வருட புத்தாக்கமான செயற்பாடுகளின் பூர்த்தியை கொண்டாடுகின்றது. தெற்காசியாவில் துரிதமாக மேம்பட்டுவரும் நிதித் தொழில்நுட்ப பகுதியாக அமைந்திருக்கச் செய்வதில் இலங்கையை மாற்றியமைக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தது.

நிதித் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொழிற்துறையில் mCash முன்னணியில் திகழ்வதுடன், தொடர்ச்சியாக மேம்பட்டு, நவீன தீர்வுகளை அறிமுகம் செய்வதில் முன்னிலையில் திகழ்கின்றது. மொபைல் பண வாடிக்கையாளர் வொலட்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் வசூலிப்புகள் நிர்வாக தீர்வுகள், கொடுப்பனவு கேட்வே சேவைகள், LankaQR கொடுப்பனவு தீர்வுகள், முகவர் வங்கிச் சேவை, உள்ளக பண ரெமிட்டன்ஸ் சேவை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட நிதிச் சேவைகள் போன்றன அடங்கலாக டிஜிட்டல் கொடுப்பனவு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தீர்வாக mCash தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

mCash துரித வளர்ச்சி தொடர்பான தனது பயணத்தில், நாட்டில் காணப்படும் மொபைல் பணப் புழக்கத்தில் 58% ஐ தன்வசம் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 100க்கு அதிகமான கட்டணப் பட்டியல் கொடுப்பனவு பங்காளர்கள் மற்றும் நாளிகை வலையமைப்பு பங்காளர்களை mCash கொண்டுள்ளதுடன், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்காக துரித கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இன்று, இலங்கையர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக mCash மாற்றம் பெற்றுள்ளதுடன், 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பதிவு செய்துள்ளதுடன், 1 மில்லியனுக்கு அதிகமான கொடுக்கல் வாங்கல்களை தனது 30,000+ அதிகமான முகவர் வலையமைப்பினூடாகவும் தொடுகை பகுதிகளினூடாகவும் கையாள்கின்றது. இதில், விற்பனை, சுப்பர்மார்க்கெட் பகுதிகள், விற்பனை நிலையங்கள், மற்றும் டிஜிட்டல் பங்காளர்கள் போன்றன அடங்குகின்றன. இலங்கையின் பணப் புழக்கமில்லாத பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் mCash முன்னிலையில் திகழ்ந்தது. QR கொடுப்பனவு திட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய விற்பனையாளர்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தனது நாளிகைகளில் தேசிய LankaQR கொடுப்பனவு திட்டத்தை வழங்கும் அங்கிகாரம் பெற்ற சேவை வழங்குநர் எனும் வகையில், mCash தொடர்ந்தும் QR பின்பற்றலை பேணுவதுடன், 50,000+ QR கொடுக்கல் வாங்கல்களை மாதாந்தம் கையாள்கின்றது. QR கொடுப்பனவுகள் போன்ற பணப் புழக்கமில்லாத தீர்வுகளை வழங்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறியளவு முதல் பாரியளவு விற்பனை நிலையங்கள் பயன்பெறுகின்றன.

முக்கியமாக, வங்கிச் சேவைகளை பயன்படுத்தியிருக்காதவர்களை அவற்றை பயன்படுத்தும் வாய்ப்பை mCash ஏற்படுத்தியிருந்ததுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுக்கு முதன் முறையாக நிதிச் சேவைகளை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எந்த மொபைல் வலையமைப்பாக இருந்தாலும், அடிப்படை வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்து, வங்கிகள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான இடையீட்டாளராக இந்த கட்டமைப்பு அமைந்துள்ளது. மேலும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பணப் பரிமாற்ற சேவைகள் வழங்குநர்களுடன் mCash கைகோர்த்து குறைந்த செலவில் உள்ளக பண அனுப்புகை சேவைகளை வழங்கி பணத்தை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் பயனளிக்கின்றது.

வாடிக்கையாளர் சௌகரியத்தை விரிவாக்கம் செய்து, அதன் வங்கிப் பங்காளர்களுடனான பங்காண்மையின் அடிப்படையில் mCash இனால், இணைய கொடுப்பனவு கேட்வே தீர்வுகளையும், point-of-sale கொடுப்பனவு தீர்வுகளை (POS) விற்பனை நிலையங்களுக்கும், Visa மற்றும் MasterCard போன்றன அடங்கலாக சர்வதேச கார்ட் வலையமைப்புகளிடமிருந்து கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதையும் வழங்குகின்றது.

டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த mCash கட்டமைப்பு கடந்த தசாப்த காலத்தில் தன்னை அர்ப்பணித்திருந்தது. தொழில்நுட்பம், நம்பிக்கை, தங்கியிருக்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் புதிய நியமங்களை ஏற்படுத்தியிருந்த mCash, டிஜிட்டல் கொடுப்பனவு புத்தாக்கத்தில் அடுத்த கட்டத்தை அறிமுகம் செய்து, அதிகளவு இணைக்கப்பட்ட, மதிநுட்பமான மற்றும் பணப்புழக்கமில்லாத இலங்கையை நோக்கி நகரச் செய்வதில் முக்கிய பங்காற்றும். சர்வதேச டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்புகளில் எதிர்காலத்துக்கு உகந்த தீர்வாக வியாபாரங்கள் மற்றும் ஆரம்ப நிலை சமூகங்களுக்கு mCash உடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X