2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உடன்படிக்கையில் சீனா

A.P.Mathan   / 2013 ஜூலை 12 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து குருநாகல் வரையில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உடன்படிக்கையில் சீனாவின் வீதி நிர்மாண கம்பனி இலங்கையுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
 
இதன் மூலம், இலங்கையில் அதிகளவு வெளிநாட்டு முதலீடொன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
 
சீனா மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் (இன்டர்நஷனல்) கம்பனி லிமிடெட் நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 
 
கொழும்பிலிருந்து வடக்கை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை குருநாகல் மற்றும் தம்புள்ளை வழியாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இங்கிருந்து கண்டி மற்றும் திருகோணமலைக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு மொத்தமாக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .