2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

17 வருட கால பாதுகாப்பினை வழங்கி வரும் ஜனசக்தி

A.P.Mathan   / 2014 மே 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பல்தேசிய மிடாஸ் குழுமத்தின் துணை நிறுவனமும், இலங்கையில் 30 வருடங்களாக கையுறைகள் உற்பத்தி செய்வதில் முன்னோடியாக திகழும் Industrial Clothing நிறுவனம், கடந்த 17 ஆண்டுகளாக ஜனசக்தி நிறுவனத்துடன் தாம் கொண்டுள்ள வலுவான தொடர்பின் மூலம் அதன் வணிக செயற்பாடுகள் மற்றும் மனிதவள திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது என கருதுகின்றது.

இந் நிறுவனம் கடந்த 1978 ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் உற்பத்தி ஆலைகள் மற்றும் மனித மூலதனம் ஆகியவற்றின் செயற்பாடுகளை பியகம மற்றும் அவிசாவளை பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது.

Industrial Clothing குழுமத்தில் 15 ஆண்டுகளாக கணக்கியல் பிரிவில் உதவி முகாமையாளராக பணிபுரிபவரும், சிரேஷ்ட உறுப்பினருமான டஷ்னிகா களுபோவில கருத்து தெரிவிக்கையில், 'ஜனசக்தி நிறுவனமானது தனது நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்திற்கும் தீ, கொள்ளை, தீ இழப்புகள், ஆலை மீதான அபாயங்கள், மின் பொருட்கள், பணப் பரிமாற்றம் மற்றும் கடல் போன்றவற்றிடமிருந்து முழுமையான பாதுகாப்பினை வழங்குகிறது' என்றார்.

'பியகம பிரதேசத்தில் எதிர்பாராத தீ விபத்தினால் எமது ஆலையொன்று முற்றாக சேதமடைந்த போது 6 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இழப்பீட்டு தொகையை பெற எம்மால் முடிந்தது. சுமார் 60,000 யூரோவுக்கு மேல் சேதங்கள் ஏற்பட்டன. எமக்கு அவசியமான தருணங்களில் அபாய பொறியியலாளர்கள் எம்முடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றினர். அனைத்து வசதிகளும் புதிய ஆலைக்கு மாற்றப்பட்டதுடன், இழப்பீட்டு தொகை எவ்வித தாமதமுமின்றி கிடைத்தன. ஜனசக்தி நிறுவனத்துடனான எமது வலுவான தொடர்பின் மூலம் எமது வியாபாரத்தை பாதிக்கக்கூடிய எதிர்பாராத அசம்பாவிதங்களின் போதும் எம் வியாபாரத்தை சீராக கொண்டு செல்வதற்கான ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது' என அவர் தெரிவித்தார்.

குழு தனிநபர் விபத்து காப்பீடுகள் மற்றும் குழு மருத்துவம் மற்றும் மருத்துவமனை காப்பீடுகள் உள்ளிட்ட சட்டரீதியாக தமது பணியாளர் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

'ஜனசக்தி நிறுவனம், தொடர்ந்து 17 வருடங்கள் எமது தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடுகளை வழங்கி வருவதுடன், வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. எமது மனித மூலதனத்திற்கு முழுமையான மன நிம்மதியை வழங்கும் பங்காளராக ஜனசக்தி விளங்குகிறது. ஜனசக்தி நிறுவனம், எதிர்பாராத விபத்தின் போது காலை இழக்கும் ஊழியருக்கு செயற்கை காலினை வழங்குவதுடன், வேலைத்தளம் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் மரணத்தின் போது அவரது குடும்பத்திற்கோ அல்லது சார்ந்துள்ளோருக்கோ காப்பீட்டு தொகையை வழங்குகிறது' என களுபோவில தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனத்தின் மோட்டார் அல்லாத மற்றும் மருத்துவ காப்புறுதி பிரிவின் உதவி பொது முகாமையாளர் பிரமிளா தம்பார், 'கடந்த 17 வருடங்களாக Industrial Clothing நிறுவனம் இழப்பீடுகளை குறைப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். எமது அபாய பொறியியலாளர்கள் 3 ஸ்தானங்களில் ஊழியர்கள் சந்திக்கக்கூடிய முக்கிய சவால்கள் மற்றும் ஆபத்துக்களை கண்டறிய உதவுவதுடன், அத்தகைய அபாயங்களிலிருந்து ஏற்படும் இழப்பீடுகளை குறைத்து கொள்வதற்காக ஒன்றிணைந்து பணிபுரிகின்றனர்' என்றார்

'ஜனசக்தி நிறுவனமாகிய நாம், காப்புறுதி செயற்பாட்டின் நீடித்த தன்மைக்கு சவாலாக விளங்கும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளுடன் நெருங்கி சேவையாற்றி வருகின்றோம். எமது அர்ப்பணிப்பு மிக்க 24 மணிநேர மருத்துவ செயற்பாடுகள் மற்றும் மருத்துவ பிரிவின் மூலம் எமது மருத்துவ காப்புறுதிதாரருக்கு தமது இக்கட்டான சூழ்நிலைகளின் போது காப்புறுதி தேவைகளை பூர்த்தி செய்கிறது' என தம்பார் மேலும் தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனம், தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களை கௌரவப்படுத்துவதுடன், கடந்த 2 தசாப்தங்களாக இலங்கை காப்புறுதி சந்தையில் முன்னணி காப்புறுதி வழங்குனராக விளங்கிய ஜனசக்தி இந்த வருடம் காப்பீட்டு காப்புறுதி துறையில் தனது 20 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X