2024 மே 04, சனிக்கிழமை

2000 ரூபாயை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புழக்கத்திலுள்ள ரூ. 2000 நாணயத்தாள்களை மீளப் பெறுவது தொடர்பில் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்திருந்த நிலையில், பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் இந்திய நாணயத் தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவனையிலிருந்த ரூ. 6.73 இலட்ச கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த 2000 ரூபாய் நாணய புழக்கம், 2023 மார்ச் மாதத்தில் ரூ. 3.62 இலட்ச கோடி ரூபாயாக குறைவடைந்துள்ளதாக அறிவித்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் புழக்கத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள போதுமானதாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த 2000 ரூபாய் நாணயத்தாளை மீளப் பெறுவது தொடர்பான அறிவித்தல் வெளியாகி முதல் 20 நாட்களுக்குள் புழக்கத்திலிருந்த சுமார் 50சதவீதமான நாணயத்தாள்கள் வங்கிகளுக்கு கிடைத்திருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக, இந்தியா முழுவதிலும் காணப்படும் 19 ரிசர்வ் வங்கி கிளைகள் மற்றும் எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் இந்திய 2000 ரூபாய் தாள்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம், அல்லது வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளில் வைப்புச் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .