2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஆசிய தொழில்நுட்ப காப்புறுதியின் விருது ஜனசக்திக்கு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இவ்வாண்டு நடைபெற்ற ஆசிய தொழில்நுட்ப காப்புறுதி விருது வழங்கும் நிகழ்வில் உள்நாட்டு காலநிலை மாற்றங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட பூகோள தகவல் செயல்முறையை அடையாளப்படுத்தும் நோக்கில் ஜனசக்தி நிறுவனத்திற்கு 'சிறந்த தொழில்நுட்ப காப்புறுதி வழங்குனர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய தொழில்நுட்ப காப்புறுதியின் மூலம், பிராந்திய ரீதியில் காப்புறுதி நட்ட அச்சத்தை தவிர்க்க புதுமையான தீர்வுகளை வழங்கிய காப்புறுதி நிறுவனங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் இவ்விருதானது வழங்கப்பட்டிருந்தது.

அண்மையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பிரிவில் போட்டியிட்ட மூன்று நிறுவனங்களை பின்தள்ளிவிட்டு இவ்விருதை ஜனசக்தி தனதாக்கிக் கொண்டது.

'ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நட்டஅச்ச முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தல்கள் போன்றவற்றிற்கான 'சிறந்த காப்புறுதி வழங்குனர் - தொழில்நுட்பம்' என்ற விருது வழங்கப்பட்டது' என ஆசிய தொழில்நுட்ப காப்புறுதி அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், ஜனசக்தி நிறுவனத்தின் தீர்வுகள் காப்புறுதி உள்ளக தரவுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டு Google maps மூலம் GIS சேவைகள் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ் ஒழுங்குமுறையானது வெள்ளப்பெருக்கு இடம்பெறக் கூடிய அதிகூடிய மற்றும் குறைவான ஆபத்து கொண்ட இடங்களின் சரியான விபரங்களை காப்புறுதி செயல்முறை ஊடாக வழங்கி பொருத்தமான நட்டஅச்ச பகுப்பாய்வுகளை தெரிவு செய்யக்கூடிய வகையிலான தீர்வுகளை வழங்குகிறது.

மேலும் இதனூடாக monitor motor claim processing பணியாளர்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடிய வகையிலான விரிவான அம்சங்களும், ஜனசக்தி காப்புறுதியின் call centre பணியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ் GIS செயற்பாடானது எமது நட்ட அச்சத்தை கணிப்பீடு செய்வதற்கு அவசியமான உள்நோக்கினையும், எமது வளங்களை சிறந்த முறையில் விரிவுப்படுத்தக்கூடிய வாய்ப்பையும் வழங்குகிறது' என ஜனசக்தி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

பொதுவாக, காப்புறுதி நிறுவனங்கள் தங்களது இலாப அளவை பாதிக்கக்கூடிய பேரிழப்புகளின் போது திடமான கோரிக்கைகளை வழங்குகின்றன. எனினும், இவ்வகையான பேரிழப்புகளின் அபாய தரவுகளை பொறுத்தே சேவைகள் வழங்கப்படுகின்றன. எவ்வகையான காப்புறுதியின் அபாயக் கணிப்பீட்டின்போது பூகோள அமைவிடம் குறித்து முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. 

இப்பயன்பாட்டின் மூலம் ஜனசக்தி குழுவினருக்கு மதிப்பீட்டாளர்களின் மோட்டார் சைக்கிளில் தரமேற்றப்பட்டுள்ள GPS tracking device மூலம் விபத்து இடம்பெற்ற சரியான இடத்தை கண்டுபிடிக்கும் வசதிகள் உள்ளடங்கலாக பல தீர்வுகளை வழங்குகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தை நகரம் அல்லது மாவட்டத்தை வைத்து கண்டுபிடிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

இச் செயல்முறையின் மூலம் நேரடி கணினிமுறை மதிப்பீடு, ஜனசக்தி கிளைகளின் தகவல்கள், ஆய்வு நிலையங்கள் மற்றும் ஜனசக்தி குறுந்தகவல் (SMS) செயல்முறை ஊடாக எவ்விடத்திற்கும் குறுந்தகவல் அனுப்பக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அத்துடன் புதிய அமைவிடங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான வசதிகளும் உள்ளன.

உள்ளக காப்புறுதி செயல்முறையில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள இடங்களை சரியான தரவுகளுடன் அடையாளம் கண்டுகொள்வதற்கான வசதிகள் காணப்படுகிறது. மேலும் இதன் மூலம் விசாலமான தேடல் வசதிகள் மற்றும் உபயோகிப்பவர்களுக்கு (Users) விபத்து நடந்த இடம், திகதி மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான தொகை போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .