2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

2013இல் இலங்கை ஆகாய விமான பயணிகள் கையாள்கை 3.3 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான விமான நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டில் கையாளப்பட்டிருந்த பயணிகளின் எண்ணிக்கை 3.3 வீதத்தால் அதிகரித்திருந்தது. இதில் வேறு விமானங்களில் மாறிச் செல்வதற்காக வருகை தந்திருந்த பயணிகளும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் விமானங்களின் போக்குவரத்தும் 5 வீதத்தால் அதிகரித்து 50,802 ஆக அதிகரித்திருந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த தனது ஆண்டறிக்கையில் கடந்த ஆண்டில் கையாளப்பட்டிருந்த சரக்குகளின் எண்ணிக்கையும் 3.9 வீதத்தால் அதிகரித்திருந்ததென அறிவித்துள்ளது.
மத்தல விமான நிலையத்தின் ஊடாக 36,137 விமானப் பயணிகள் கடந்த ஆண்டில் கையாளப்பட்டிருந்ததாகவும், 1362 விமானச் சேவைகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X