
நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 90பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எயிட்ஸ் மையத்தின் காப்பாளரான வைத்தியர் சுஜாதா சமரகோன் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு மொத்தமாக 186 பேர் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் வருடாந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
குழந்தைகள் உட்பட சுமார் 4200 மக்கள் எச்ஐவி தொற்றுடன் இலங்கையில் தற்போது வசித்து வருவதாகவும் வைத்தியர். சமரகோன் தெரிவித்தார். மேற்பார்வையில் கருதும் போது, இலங்கை மிகவும் குறைந்தளவு பாதிப்பை கொண்ட நாடாகவே கருதப்பட்ட போதிலும், இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீராக அதிகரித்த வண்ணமுள்ளது. இது இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரேயளவாக காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த, இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், தெளிவுபடுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது. ஆனாலும், நிலையாண்மை திட்டங்கள் சமூகத்தில் நிலையாக காணப்படக்கூடிய தன்மை குறைவாகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் 16 வயது முதல் 49 வயதுக்குட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் பெருமளவானோர் தொழில் புரிந்து வருகின்றனர். எச்ஐவி தொற்றின் மூலம் நாட்டின் உற்பத்தி திறனிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், இது பெருமளவில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறு கவனயீனமாக இருப்பது, பெருமளவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது, விசேடமாக, நாடு இன்றைய கால கட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் பெருமளவில் தங்கியுள்ளது.
எனவே எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. விசேடமாக தொழில் புரியும் மக்கள் மத்தியில் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது என எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் வெளிச்செல்லும் தலைவர் கிஷு கோமஸ் தெரிவித்திருந்தார்.
தொழில் நிலையங்களில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் முதல் 10 சிறந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டில் இந்த அமைப்புடன் இணைந்திருந்தன.
இந்த வருடாந்த செயலமர்வின் போது, எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அநிர்வான் கோஷ் தஸ்டிடார் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வை பரவலாக கூட்டாண்மை நிறுவனங்கள் தொடர்ச்சியான செயற்பாடுகளை மேலும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த செயலமர்வின் போது சுரேஷ் டி மெல் மற்றும் ஸ்ருவட் செப்மன் ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
.jpg)