2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2013இல் தேயிலை உற்பத்தியில் சாதனை

A.P.Mathan   / 2014 ஜனவரி 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டில் மொத்தம் 340.2Mkg தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாகவும், இது 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 வீத அதிகரிப்பு என ஜோன் கீல்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள தேயிலை தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டிருந்த 331.4Mkg தேயிலை சாதனையாக அமைந்திருந்தது. கடந்த பதிவான சாதனை மிகுந்த பெறுமதியில், உயர் நில தேயிலை உற்பத்தி 2.8Mkg வளர்ச்சியையும், மத்தியளவு நில தேயிலை உற்பத்தி 3.9Mkg வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தன. தாழ் நில தேயிலை உற்பத்தி குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்ததுடன், இதன் பெறுமதி 7.2Mkg ஆக பதிவாகியிருந்தததென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .