2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

2013இல் தேயிலை ஏற்றுமதி 1.5 பில்லியன் டொலர்களாக பதிவு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதி 2013இல் 1.5 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்ததாக இலங்கை சுங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்திருந்த சியாகா ஆய்வு நிறுவனம், 2013இல் மொத்தமாக 319 Mக்க் அளவு தேயிலை ஏற்றுமதி இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும், இந்தப் பெறுமதி 2012ஆம் ஆண்டுக்கு சமமான தொகையாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2013 இல் ரூபா பெறுமதி 11% ஆல் அதிகரித்து 199 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. 2011 இல் ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட அதியுயர் டொலர் பெறுமதி 2011ஆம் ஆண்டில் 1490 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.

இலங்கை அதிகளவு தேயிலையை ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷ்யா, ஈரான், துருக்கி, ஈராக், சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஜப்பான், ஜோர்தான், சிலி போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .