2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2013 இல் 3.6 பில். அமெ. டொ. பெறுமதியான முதலீடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி

A.P.Mathan   / 2014 மார்ச் 14 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மொத்தமாக 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தில் அனுமதியளித்திருந்தது. இதில் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் உள்நாட்டு முதலீட்டாளர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

'கடந்த அண்டு 2.3 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களுக்கான முதலீடுகள் வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்பட்டிருந்ததுடன், 1.3 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களுக்கான முதலீடுகள் உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தும் பெறப்பட்டிருந்தது'  என இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் லக்ஷ்மன் ஜயவீர தெரிவித்திருந்தார்.

பெரும்பாலான முதலீடுகள் உட்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் நிர்மாணத்துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் என தாம் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .