2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலங்கையின் எயார்டெல் நிறுவனத்தை கொள்வனவு செய்ய ஆக்சியாடா ஆர்வம்

A.P.Mathan   / 2013 மார்ச் 06 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் இந்தியாவின் பார்தி எயார்டெல் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்ய மலேசியாவின் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான ஆக்சியாடா ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆக்சியாடா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை தொலைத்தொடர்பு சந்தையில் மொத்தமாக 8 – 9 சந்தை கொள்ளளவை எயார்டெல் லங்கா கொண்டுள்ளது. இதேவேளை டயலொக் 40 வீதமான சந்தைகொள்ளளவை தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கை சந்தை என்பது மிகவும் சிறியளவில் காணப்படுகிறது. எனவே இலங்கை சந்தையில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்வது எவ்வித பயனையும் வழங்காது, எனவே இந்த வியாபாரத்தின் பங்குகளை விற்பனை செய்துவிட்டு ஆபிரிக்க சந்தைகளில் தனது கவனத்தை செலுத்துவதன் மூலம் நிறுவனத்தின் தற்கால கடன்களை குறைத்துக்கொள்ள முடியும் என பார்தி எயார்டெல் நிறுவனத்தின் ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெகு விரைவில் இந்த கொடுக்கல் வாங்கல் குறித்த அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .