2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

டயலொக் வர்த்தக நாமத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகம்

A.P.Mathan   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஸ்மார்ட் ஃபோன்களின் பாவனையை அதிகரிக்கும் நோக்கில் டயலொக் நிறுவனத்தின் மூலம் டயலொக் வர்த்தக நாமத்தில் சகாய விலையில் புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் ஒவ்வொரு நபருக்கும் ஸ்மார்ட் ஃபோன் ஒன்றின் உரிமையாளராவதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் ஒரு வருட உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. டயலொக i35 மற்றும் டயலொக i43 எனும் பெயர்களில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகமாகியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .